செவ்வாய், 27 மே, 2025

ரானடே, காந்தி, ஜின்னா - அம்பேத்கர் நூல் தொகுப்பு - 1

 ரானடே, காந்தி, ஜின்னா

முகவுரை 

மறைந்த நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே அவர்களுடைய 101 வது பிறந்தநாள் 1943 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி அன்று பூனா தட்சிண சபை என்னை சொற்பொழிவாற்றுமாறு விரும்பி கேட்டுக் கொண்டது. இந்திய அரசியலில் திரு. காந்தியும் திரு. ஜின்னாவும் செய்துள்ள குழப்பத்தை நான் விமர்சிக்கிறேன். அதனால் கண்டனம் செய்து வருவது காங்கிரஸ் பத்திரிகை உலகம். என்னிடம் காங்கிரஸ் பத்திரிகை உலகம் காட்டும் எதிர்ப்புணர்ச்சியை, இந்துக்கள் தீண்டப்படாதவர் மேல் உள்ள வெறுப்புணர்ச்சியே.


 காங்கிரஸ் பத்திரிகை உலகம் என் மீது கடுமையான இழிவான விமர்சனத்தை செய்தாலும் என் பணியை நான் செய்தே ஆக வேண்டும். திரு. காந்தி திரு. ஜின்னாவையும் வெறுக்கவில்லை. ஆனால் விரும்பவில்லை இந்தியாவை நான் நேசிக்கிறேன் என்பதே அதற்கு காரணம். நாடு தனி மனிதனை விட பெரியது.


பி. ஆர். அம்பேத்கர்

சதாரா உயர்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பில் படித்து வந்தேன். 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று பள்ளி மூடப்பட்டது, அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை ஏன் என்று கேட்டதற்கு ரானடே இறந்து விட்டார் என்று சொன்னார்கள். மற்ற பையன்களைப் போலவே நானும் விடுமுறைக்காக மகிழ்ந்தேன். அவர் என்ன செய்தார் என்று தெரியாது. இரண்டாவது சம்பவம் எனது தந்தையுடைய பழைய ஆவணங்களை பிரித்து பரிசீலித்த போது அவற்றில் 1892 ஆம் ஆண்டு மகர் வகுப்பினரை ராணுவத்தில் சேர்க்கக்கூடாது என்று இந்திய அரசாங்கம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக அளித்த விண்ணப்பம் ஒன்று இருக்க கண்டேன். மகர் வகுப்பினரின் குறையை நீக்க ரானடே தயாரித்து தந்த விண்ணப்பமே அது என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். இன்றைய இந்திய அரசியலில் அவருடைய பங்கு என்ன என்பது பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்.

ரானடே மாமனிதர் என்று அழைப்போரும் உண்டு, எதிர்ப்போரும் உண்டு. உண்மை எங்கு உள்ளது? மாமனிதரின் வரலாற்றில் உள்ளது. வரலாற்று மாற்றம் மூன்று வகையானது.

(i)  அகஸ்டின் கொள்கைப்படி (Augustinian theory) இறைவன் திட்டத்தின் படியே வரலாறு நிகழும், தீர்ப்பு நாளன்று திட்டம் நிறைவேறும். 

(ii)  பக்கிள் (Buckle) கொள்கையின்படி வரலாற்றை நிலவியலும் இயற்பியலும் படைக்கிறது.
(iii)  காரல் மார்க்ஸ் (Karl Marx) கொள்கையின்படி பொருளாதார சக்திகளின் படைப்பே. இம்மூன்றில் ஒன்றுகூட வரலாறு என்பது மாமனிதர் வரலாறு என்று கூறவில்லை. அகஸ்டின் கருத்துக்களை மதவாதிகளை தவிர மற்றவர்கள் ஏற்பதில்லை. ஆனால் பக்கிள், மார்க்ஸ் இருவரின் கருத்துகளில் உண்மை இருந்தாலும் அது முழு உண்மை இல்லை. வரலாற்றை படைப்பதற்கு மனிதனும் ஒரு காரணம்.

ரானடே வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதி, முதல் தரமான பொருளாதார வாதி, முதல் தரமான வரலாற்று ஆய்வாளர், முதல் தரமான கல்வியாளர், முதல் தரமான இறை பக்தர் ஆனால் அரசியல்வாதியாக இல்லை. ஒருவேளை அரசியல்வாதியாக இருந்தால் மாமனிதர் ஆகி இருக்க முடியாது அரசியல்வாதி என்பவர் யார்? ஆபிரகாம் லிங்கன் சொன்னார்; ‘’மக்கள் நலன்கள் இன்றி வேறு  நலன்கள் உடைய கூட்டத்தினர்’’, மொத்தமாக பார்த்தோமானால் நாணயமானவர்களில் இருந்து விலகி இருப்பவர்கள்.  
 
இந்து சமூகத்தை சீர்திருத்துவதை விட வேறு கடமை இல்லை என்றார். அவர் சமூக சீர்திருத்த நோக்கத்தையே வளர்க்க நிரந்தரமான முறையில் அமைப்பு தேவை என்று அறிந்தார். அனைத்திந்திய சமுதாய மாநாட்டை தொடங்கினார். இது இந்திய தேசிய காங்கிரசுக்கு துணை உறுப்பாக இருந்தது. ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூகத்திற்காக போராடும்போது அவரை தியாகி என்று எவரும் புகழ்வதில்லை, நட்புக்கொள்வதில்லை. ஆனால் ஒரு அரசியல் வாதிக்கு  சமுதாயம் முழுமையாக ஆதரவு தருகிறது. நமது முன்னோர்கள் அறிவு மிக்கவர்கள், கண்ணியமானவர்கள், உயர்ந்த லட்சிய சமுதாய அமைப்பு என்று நம்பினார்கள். சமுதாயத்தில் வெட்கப்படத் தக்கவை, தீங்கானவை என்று ரானடே கருதினாரோ அவற்றை தம் சமயத்தின் புனிதம் என்று கருதினார்கள். 

 அறிவாளிகள் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றனர்.

1. நம்பிக்கை - பழமைவாதம், அரசியல் நோக்கம் இல்லாமை 

2. நம்பிக்கையில் புதுமை, அரசியல் நோக்கம், இலக்கு உண்டு

முதல் பிரிவுக்கு தலைவர் சிப்ளங்கர்(Chiplunkar), இரண்டாவது பிரிவுக்கு தலைவர் திலகர். இவர்கள் இருவரும் சேர்ந்து ரானடேக்கு எவ்வளவு தொல்லை தர முடியுமோ  அவ்வளவுவையும் தந்தனர். சமூக சீர்திருத்தங்களுக்கு பெருந் தீங்கு செய்தது மட்டுமில்லாமல் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களுக்கு பெருங்கேடு செய்தனர்.

பிராமணனைச் சமுதாயத்தின் பிற பகுதி மக்கள் வழிபட வேண்டும். அவனுடைய வகுப்பினரே வாழவும் ஆளவும் பிறந்தார்கள். பிறர் எல்லோரும் அவர்களுக்கு சேவை செய்ய பிறந்தார்கள். அவர்களுக்கென்று  வாழ்க்கையோ ஆளுமையோ அவற்றை வளர்த்துக் கொள்ளும் உரிமையோ இல்லை. இதுவே இந்து சமயத்தின் வேதம். இந்திய சமயத்தின் குறிக்கோளான நால்வகை பாகுபாட்டின் சீரழிந்த வடிவமே இன்றைய சாதி அமைப்பு முறை. பிறவி மூடர்கள் தவிர வேறு எவரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1819 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச்  சட்டம் (VII of 1819) நிறைவேற்ற வேண்டி இருந்தது. அந்த சட்டத்தின்படி மனைவியரையோ பெண் குழந்தைகளையோ மயக்கி வேசி தொழில் ஈடுபடுத்துவதற்கு பெண்கள் பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர். கணவரும் தந்தையரும் குடும்பங்களையும் குழந்தைகளையும் ஆதரவற்று விட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு சமுதாயத் தீங்கையும் பிராமணர்கள் காப்பாற்ற முன்வந்தார்கள். கோடிக்கணக்கான மக்களை அடிமைகளாக்கி தீண்டாமையை பாதுகாத்தார்கள். சாதி முறையை ஆதரித்தார்கள். கைம்பெண் கொடுமையும் குழந்தை திருமணத்தையும் ஆதரித்தார்கள். கைம்பெண்களை சுட்டெரிப்பதை ஆதரித்தார்கள். பல பண்டிதரை ஒரு ஆடவர் மணக்கலாம் என்ற பழக்கம் உருவாக்கியதன் விளைவாக ராஜபுத்திரர்கள் அவர்களுக்கு பிறந்த ஆயிரக்கணக்கான பெண்களை கொன்று ஒழித்தனர். எவ்வளவு அவமானம்? எத்தனை தீங்குகள்? நாகரீகம் அடைந்த சமூகத்தின் முன் இத்தகைய சமூகம் தலைக்காட்ட முடியுமா? வாழ முடியுமா? இந்த வினாக்களைத்தான்  ரானடே எழுப்பினார். இவற்றிற்கு தீவிர சமூக சீர்திருத்தமே முடிவு என்று நம்பினார்.

அக்காலத்தில் அவருக்கு பெரும் எதிரிகளாக இருந்தவர்கள் அறிவாளிகளான அரசியல்வாதிகளே. அரசியல்வாதிகள் புதிய கொள்கைகளை பரப்பினார்கள். அரசியல் சீர்திருத்தம் முதலில் பின்பு சமூக சீர்திருத்தம் என்று மேடை தோறும் முழங்கினார்கள்.  முதலில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டி இருப்பதால் அரசியல் அதிகாரம் நமக்கு வேண்டும் என்று வாதம் செய்கிறார்கள்.

கேள்வி என்னவென்றால் உரிமைகளே இல்லாத சமுதாயத்தை அரசு எவ்வாறு காப்பது. 

இரண்டாவது காரணம் தனி மனிதர்களுக்கு சட்டப்படி ஆதார உரிமைகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க வேண்டுமானால் அரசியலில் ஆதாரம் இருந்து தீர வேண்டும். சட்டம் நிறைவேற்றும் உரிமைகளை ஏற்று அங்கீகரிக்கும் வகையில் சமூக உணர்வு இருக்குமானால் உண்மையில் உரிமைகளை பாதுகாக்கப்படும், உறுதியாகவும் இருக்கும். அடிப்படை உரிமைகள் சமுதாயத்தில் எதிர்க்கப்படும் என்றால் சட்டமோ, நீதிமன்றமோ, நாடாளுமன்றமோ உத்தரவாதம் தராது. 

மூன்றாவது வாதம் ஜனநாயக ஆட்சியை அமைப்பது அவர்கள் நோக்கம் ஆனால் ஜனநாயக அரசு சாத்தியமா என்று சிந்திக்கவில்லை ஒரு சனநாயகத்திற்கு ஒற்றுமை, பொறுமை, பொது முடிவுகளுக்கு ஒத்துப்போதல் மற்றவர்களை மதித்து சமமாக கருதுதல், கடுமையான சமுதாய பிரிவுகள் இல்லாத சமூக அமைப்பு. ரானடே எடுத்த நிலையும் தீட்டிய செயல் திட்டமும் சரியானவையே. இந்து சமுதாயத்தில் சிலருக்கு சலுகைகளும் பலருக்கு இல்லாமைகளும் இருந்தன. ரானடே நோக்கம் உண்மையாக சமூக ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்பது. ஒழுக்கமான உறுதியே அரசியல் விடுதலையைவிட  முக்கியமானது.

ராவ் பகதூர், சி. அனந்தாச்சார்லு  தயாரித்த சமூக சீர்திருத்தத் திட்டத்தில் உள்ள ஐந்து பிரச்சனைகளை குறிப்பிடுகிறார். 1) இளமைத் திருமணம், 2)  கைம்பெண் மறுமணம், 3) நம் நாட்டு மக்களுக்கு வெளிநாட்டுக்கு பயணம் செய்ய அல்லது சில காலம் வெளிநாட்டில் தங்குவதற்கு சுதந்திரம், 4) பெண்களுக்கு சொத்துரிமை, 5) பெண் கல்வி. இந்த திட்டத்தில் மிகவும் பெரும்பானவற்றில் ரானடே வெற்றி கண்டார். அனைத்திலும் வெற்றி காணவில்லை எனில் அவருக்கு எதிராக பல சக்திகள் இருந்தது. உதாரணத்திற்கு ஒரு மசோதா பன்னிரண்டு வயது அடையாத பெண்ணோடு உடலுறவு கொள்ளும் கணவனை தண்டிப்பதை கொண்டது. அறிவுள்ளவன் மானமுள்ளவன் எவனாவது எதிர்ப்பானா? ஆனாலும் அதை எதிர்த்தார்கள். சமூகச் சீர்திருத்தப் போக்கு வீழ்ச்சி கண்டது. காலம் செல்ல செல்ல சமூக சீர்திருத்த மாநாட்டை விட்டு  மக்கள் இந்திய தேசிய காங்கிரசை நாடினார்கள். சமூக சீர்திருத்தவாதிகள் தோற்றார்கள். அரசியல்வாதிகள் வென்றனர்.


பிறரோடு ஒப்பிடும் போது ரானடேவின் நிலை என்ன? அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி எனவே பிற சமூக சீர்திருத்தவாதிகளோடு ஒப்பிடுவது பயன் தரும். ஜோதிபா புலே 1827 பிறந்து 1890 இல் மறைந்தார். ரானடே 1842 ல் பிறந்து 1901 இல் காலமானார். இருவருமே சமகாலத்தவர், சமூக சீர்திருத்தவாதிகள். 

ரானடேயுடன் இணையான இந்நாள் அரசியல்வாதிகள் யாவர்? ரானடே அவர் காலத்தில் பெரும் அரசியல்வாதி, ஆகவே இப்போது உள்ள மிகப் பெரிய அரசியல்வாதிகளோடு தான் அவரை ஒப்பிட வேண்டும். இந்திய அரசியல் வானிலேயே இரு மாபெரும் மனிதர்கள் காந்தியும் ஜின்னாவும் ஆவர். ஒருவர் இந்துக்களுக்கு தலைமை தாங்குகிறார். மற்றொருவர் முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகிறார். இவ்விருவரை இக்காலத்தின் வழிபாட்டு உருவங்களாகவும் மாமனிதர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களோடு ரானடேவை ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். முதலில் இவர்களைப் போன்று பிரம்மாண்ட தற்பெருமை கொண்ட வேறு இருவரை காண்பது அரிது. இருவரிடையே உள்ள தனிப்பட்ட பகையினை அரசியலாகிவிட்டனர். அதன் விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு பயமில்லை. 
இருவரும் அற்புதமாக நாடக மேடையை படைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் புகழ் ஒளியில் இருப்பதற்கான சகல  ஏற்பாடுகளையும் செய்து கொள்கின்றனர். தாமே மிக சிறந்தவர் என்று தனித்தனியே கொண்டாடுகிறார்கள். பத்திரிக்கை துறை இந்தியாவில் ஒரு காலத்தில் பணித்துறையாக இருந்தது. இப்போது அது வர்த்தகம் ஆகிவிட்டது. பொதுமக்களின் பொறுப்பான ஆலோசகர் என்று தன்னை கருதி கொள்வதில்லை. அவர் எவ்வளவு உயர்ந்தவர் ஆயினும் தவறிழைக்கும் போது பயமின்றி கண்டனம் செய்து தவற்றை எடுத்துரைத்தல் என்பது முதல் முக்கிய கடமை ஆனால் அவர்கள் அவற்றை செய்வதில்லை. பெரியவர் என்று ஒருவரை ஏற்றுக்கொண்டு அவருக்கு துதி பாடுவதே முக்கிய பணி ஆகிவிட்டது.

 இவர் பெரும் மனிதர்கள் கையில் சிக்கியுள்ள அரசியல் ஊதாரித்தனமான போட்டியாகிவிட்டது. திரு. காந்தியை ‘மகாத்மா’ என்றால், திரு ஜின்னா ‘குவயித்- இ-ஆஜிம்’  ஆக வேண்டும். காந்திக்கு காங்கிரஸ் தேவை என்றால், ஜின்னாவிற்கு முஸ்லிம் லீக் தேவை. காங்கிரஸுக்கு காரிய கமிட்டியும், அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியும் உண்டு என்றால் முஸ்லிம் லீக்கிற்கு  காரிய கமிட்டியின் கவுன்சிலிங் தேவை. காங்கிரஸ் மாநாடு நடைபெற்றால் முஸ்லிம் லீக்கும் மாநாடு நடத்த வேண்டும். காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிடுகிறதா? முஸ்லிம் லீக்கும் அறிக்கை வெளியிட்டே தீர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபைக்கு காங்கிரஸ் ஒரு விண்ணப்பம் அனுப்பி வைக்கிறது என்றால் முஸ்லிம் லீக் ஒரு விண்ணப்பம் அனுப்பி வைக்கும். காந்தி தாம் ஒரு  இந்து என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஜின்னா வற்புறுத்துகிறார். ஜின்னா முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காந்தி வற்புறுத்துகிறார். ஆனால் ரானடே மிகுந்த தன்னடக்கம் கொண்டவராக இருந்தார். இளைஞர்கள் பலர் அவரை தொடர்ந்தார்கள்.  இந்திய அரசியலில் முன்னேற்றத்தில் அவர் முக்கிய பங்கு கொண்டார். அரசியல்வாதிகள் சிலருக்கு அவர் ஆசிரியராக இருந்தார்.

ரானடேவின் அரசியல் தத்துவம் என்ன? அதனை மூன்று கருத்துகளை கருத்துகளாக தொகுத்து கூறலாம் 

 (i)  வெறும் கற்பனையான எதையும் குறிக்கோளாக வைக்கக் கூடாது. ஓர்  குறிக்கோள் நடைமுறையில் அடையத்தக்கது என்று உறுதியுடன் இருக்க வேண்டும்.

(ii )  அரசியலில் அறிவுத்திறன், கோட்பாடு என்பவற்றையும் காட்டிலும் மக்களின் உள்ளுணர்ச்சியும் மனப்போக்கையும் கவனமாக எடுத்துக் கொள்வது மிக முக்கியம். 
(iii )எதிரியை வற்புறுத்தி மேன்மேலும் இணங்க வைப்பதற்கான பின்பலம் இல்லை என்று தெரியும்போது கிடைப்பதை நிராகரிக்கக் கூடாது. 

திரு காந்தியையும்  எம் திரு ஜின்னாவையும் துதி பாடுவதை எதிர்க்கும் நான் ரானடேவிற்குப்  புகழஞ்சலி  செலுத்தும் நிகழ்ச்சியில் மட்டும் எவ்வாறு கலந்து கொள்ளலாம். இந்தியாவில் வீர வழிபாடு நிச்சயம் மறந்து போய் விடவில்லை. உருவ வழிபாட்டில் இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. மதத்தில் விக்கிரக ஆராதனை, அரசியலில் ஆராதனை தலைவனை வழிபடுதல். அந்த பக்தனையும் நெறி பிறழச்  செய்வது, ஒரு மனிதனை துதித்துப் போற்றுவதற்கு முன் அவன் உண்மையிலேயே மிக உயர்ந்தவனா என்று தெரிந்து கொள்வது அவசியம். மாமனிதரை வணங்குவதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் “திருடர்கள் ஜாக்கிரதை” என்று அறிவிப்பு பலகைக்கு அருகே “மாமனிதர் ஜாக்கிரதை” என்று அறிவிப்பு பலகையும் தொங்கவிட வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

இன்றைய இந்தியாவில் இரு மனிதர்களே தெய்வப் பீடத்தில் நிச்சயம் அமரப் போகிறார்கள். ஆனால் ரானடே அவ்வாறு கவுரவித்து பிரதிஷ்டை செய்யவில்லை. ரானடே இந்த பிறந்த நாளை தலைவனை வழிபடுதல் போன்றதல்ல. அளவற்ற நன்மதிப்பு என்ற வகை.  இங்கு நாம் கூடியிருப்பது தலைவரை பாராட்டி போற்றுவதற்காக அல்ல. ரானடேவின் அரசியல் சிந்தனையை நினைவில் கொள்வதற்கான வாய்ப்பே இது.


ரானடே பணியாற்றிய காலத்து தலைமுறையினர்  அவரை தங்கள் குருவாகவும், நண்பராகவும், தத்துவதரிசியாகவும் ஏற்றனர். இன்றைய தலைமுறைக்கும் ஏன் வருங்காலத்திற்கும் அப்படியே.

ரானடே பற்றிய ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவை பிரிட்டிஷார் வென்றது ஒரு வரப்பிரசாதமே. இந்தியாவின் நலனுக்கு உகந்தது. ஆகவே பிரிட்டிஷ் பேரரசின் கீழ் தொடர்ந்து இருந்து வருவது நல்லது என்று கூறியதாக நம்பப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் இந்தியா சுதந்திரம் அடைவதே ரானடே எதிர்த்தார் என்பதாக  குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டிற்கு ரானடேவின்  பின்வரும் வாசகங்கள் ஆதாரமாகக் கொண்டது. இந்தியாவை தாயகமாக கொண்ட பல கோடி மக்கள் கூட்டம் நூற்றாண்டுகளாக தொடர்ந்து அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முன் மக்களிடையே இருந்த கட்டுப்பாடு, குறைவான வலிமை, ஆகியவற்றை நிறைவு செய்யத் தான் என்கிற நோக்கில் அந்நிய ஆதிக்கம் தெய்வசித்தமே என்றார்.

ஒழுங்குமுறை, கட்டுக்கோப்பான அதிகாரம் போன்ற நலன்களின் மீது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அக்கறை கிடையாது. ரானடே  சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள்.

(i ) பிரிட்டன் இந்தியாவின் மீது அரசுரிமை நாட்டியதன் மூலம் நம் நாட்டின் பொருளாதார, சமூக அமைப்பை சீர்செய்யவும், புதுப்பிக்கவும் வாய்ப்பும் பாதுகாப்பும் கிடைத்தது. நாடு சுதந்திரம் அடையும்போது  வேறு அந்நிய படையெடுப்பை தடுத்து தாங்கிக் கொள்வதற்கான பலத்தை பெருக்கிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது.

(ii )  இந்த நாடு நினைவாலும் உணர்வாலும் ஒன்றிணைந்த தேசிய இனமாக உருவெடுக்கும் முன்பாகவே பிரிட்டிஷ் வல்லரசு வெளியேறும் என்றால் அது சுதந்திரத்தின் பெயரில் பெரும் குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தும்.

இங்கிலாந்து அமெரிக்கா போன்ற இயற்கை பாதுகாப்பு சூழலில் இந்திய நிலப்பரப்பு அமையப் பெறவில்லை. தன்னை சீர்திருத்திக் கொள்வதற்கு முன்பாக வெளித் தாக்குதல் ஏதேனும் நிகழ்ந்தால் இந்திய நாடு சிதறிப்போகும். பிரிட்டிஷ் அரசு அளிக்கக்கூடிய பாதுகாப்பை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். உரிய காலத்திற்கு முன்பாகவே பிரிட்டிஷ் அரசின் பிணைப்பை துண்டித்து விட்டால் வளரக்கூடிய நாடு நிச்சயம் சின்னபின்னமாகிவிடும் என்று அவர் கருதினார்.

இதன் அவசியத்தை உணர சீன அரசியலை பார்க்க வேண்டும். சீனப்  புரட்சி தோன்றி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் நிலையான அமைதி பெற்று விட்டார்களா? இல்லையே. அந்த மக்கள் இன்னும் கேட்கிறார்களே சீனப்  புரட்சி எப்போது முற்றுப்பெறும் என்றும் அதற்கு இன்னமும் நூறு  ஆண்டுகள் பிடிக்கலாம். சீனப் புரட்சி ஓர் மாபெரும் தவறு.யுவான் ஷிஷ்-காய் (Yuan Shih K’ai ) என்பவரின் கருத்து இது.  சீன குடியரசை அமைக்கும் அளவுக்கு தற்போது சீன மக்கள் முதிர்ச்சி அடைந்து விட்டார்களா? அல்லது இன்றைய நிலையில் குடியரசு முறை சீன மக்களுக்கு பொருந்துமா? வரம்பு உடைய  முடியாட்சியில் நான் நம் நம்பிக்கை உடையவன். இந்த அரசியல் நெருக்கடியால் சீனம் சிதைந்தது  போல அதை அடுத்து வரும் தீங்குகள் இன்றி காப்பாற்றுவதே என் நோக்கம்.இந்தியாவிற்கு சீனா ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவின் சுதந்திரத்தை அவர் எதிர்த்தார் என்பதை விட்டு விட்டு முதிர்ச்சி அற்ற புரட்சியினால் விளையும் தீங்குகளை முன்கூட்டியே எச்சரித்தது பற்றி நாம் மகிழ்ச்சியுற வேண்டும். 

வரும் தலைமுறை எப்போதுமே மாமனிதர்களுடைய கடைசி சொற்களில் ஆர்வம் காட்டும். ஆனால் அவர்கள் அனுபவத்தின் பயனாகவோ வருங்கால தொலைநோக்காகவோ இருக்காது. எடுத்துக்காட்டாக சாக்ரடீஸ் உயிர் திறப்பதற்கு முன் கிரிட்டோவை அழைத்து; இஸ்குலேவியஸுக்கு (Aesculapius )  நான் ஒரு சேவல் தர வேண்டும் இக்கடனை செலுத்தி விடு, மறந்து விடாதே என்றார். அடுத்து நெப்போலியனை எடுத்துக் கொள்வோம் செயின்ட் ஹெலினா தீவில் இறப்பதற்கு முன்பு வருந்தினான் என்பதற்கு சான்று உண்டு அவைகள் மூன்று.

(i)  தனது பணியின் மிக உயரிய கட்டத்தில் எட்டிய தருணத்தில் ஏன் சாகவில்லை?

(ii ) எகிப்து நாட்டை விட்டு வெளியேறியக்  கிழக்கு நாடுகள் பற்றிய பேராசையை துறந்தது.

(iii ) வாட்டர் லூவில் அடைந்த தோல்வி 

 ரானடே வருந்தினாரா? வருந்தும் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை என்று ஆவணங்கள் காட்டுகின்றன. அவர் மகிழ்ச்சியாக இறந்தார். அமைதியாக இறந்தார். அவர் மீண்டும் உயிர்பெற்று வந்தால் வருந்துவாரா? அவர் இந்திய மிதவாதிகள் பற்றி வருந்துவார். 

இந்திய மிதவாதிகளில் இன்றைய நிலை என்ன? மிதவாத கட்சி ஒரு விபத்து. இந்திய அரசியலில் மிதவாதிகள் வெறுக்கத்தக்கவர்கள். மிதவாத கட்சி, காங்கிரஸுக்கு போட்டியாக இருந்த காலம் உண்டு. ஆனால் இன்று மிதவாத கட்சிக்கும் காங்கிரசுக்கும் உள்ள உறவு நாய்க்கும் எஜமானனுக்கும் உள்ள உள்ளது போன்றது. சில சமயங்களில் எஜமானனைப் பார்த்து குறைக்கும் ஆனால் பெரும்பகுதி வாலாட்டி குழையும். மக்களாட்சிக்குக்  கட்சி இருத்தல் அவசியம். அது இல்லாமல் அரசாங்கத்தை நடத்த முடியாது.

ஒரு கட்சி ஆட்சி என்பது அது கட்சியின் வல்லாட்சி அதாவது ஆட்சிக்கு பின்னால் கட்சியின் ஆட்சி விளையாடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிர்வாக துறையும் நீதித்துறையும் வெவ்வேறாக பிரிக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் திரு சி. ராஜகோபாலாச்சாரி இது தேவையில்லை என்று பேசவில்லையா? இதுவே வரலாற்றின் ரத்த வெறி. வல்லாட்சிக்கு எதிரான உண்மையான உத்தரவாதம் மாற்றுக் கட்சிகளினால் வெல்லப்படும் என்பதை நிரூபித்து காண்பிப்பதே.

அரசாங்கம் வல்லாட்சியாக மாறாது இருக்க இரு கட்சிகள் தேவை ஆட்சியில் உள்ள கட்சி, எதிர்க்கட்சி என்று இரண்டு கட்சிகள் பணியாற்றினால் தான் அரசாங்கம் ஜனநாயக அரசாங்கமாக இருக்க முடியும். எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகம் இல்லை. மிதவாத கட்சியை உயிர்பிக்காமல் வேறு கட்சி ஒன்றை அமைக்காமல் போனால் சுதந்திரத்தை இழக்க நேரிடும். மிதவாத கட்சி வீழ்ந்ததற்கு காரணம் சரியான அமைப்பு முறை இல்லாததே. மிதவாத கட்சியின் குலைவிற்கான பொறுப்பு ஓரளவு ரானடேவைச் சாறும். ரானடே மேல் வகுப்பை சார்ந்தவர். உயர் குடியில் பிறந்து வளர்ந்தவர். பொதுமக்களின் தலைமையை பெறவில்லை. ரானடே மீது நம்பிக்கையும் அன்பும் மரியாதையும் உண்டு என்றால் வெறுமனே ஒன்று கூடி அவர் புகழ் பாடுவது அல்ல. அவர் அறிவுறுத்திய நற்செய்தியை பரப்புவதற்காக ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருந்து -

  விருந்து -  நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக...