போரின் தாக்கம்
இந்தியா பாகிஸ்தான் போர் என்று வந்தால் ஒருநாள் தாங்காது பாகிஸ்தான் என்று கூறி வருகிறார்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவு - அமெரிக்கா என்று கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.
சற்று விளைவுகளை பற்றி பார்ப்போம்.
1. இப்போது ஒருவேளை நல்ல உணவிற்கு கஷ்டப்படும் கோடிக்கனக்கான மக்கள் இருநாட்டிலும் அதிகரிக்கும்.
2. கடுமையான விலைவாசி இரு நாட்டிலும் ஏற்படும்
3. அதில் மந்திரிகளோ அல்லது பணக்கார்களோ கஷ்டப்பட மாட்டார்கள்.
4. இரு நாட்டிலும் கடுமையான பாதிப்பு இருக்கும்.
5. நம் நாட்டில் போர் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது . அப்படி இல்லையென்றால் எதற்காக ஒரு இடத்தில் இருந்து போர்வீர்களை எதற்காக நகர்த்த வேண்டும்?
6. இரு நாட்டிலும் அன்பிற்கு உரியவரை இழக்க நேறிடும்.
7. அவர்கள் பெரும்பாலும் அப்பாவி மக்களாகவே இருப்பார்கள்.
8. ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் சும்மா கொடுக்க மாட்டார்கள், அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர்களின் நிப்பாத்தனைக்கு ஒத்து போக வேண்டும்.
8. வேலைவாய்ப்பும் குறையும் உற்பத்தியும் குறையும், ஏற்றுமதியும் குறையும்.
9. மிக கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்படும்.
10. போரின் இழப்புகளை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம்.
11. நாமும் பாகிஸ்தானும் ஏழை நாடு, அதிலும் ஊழல் மிகுந்த நாடு எனவே நமக்கு போர் எல்லாம் சரிப்பட்டு வராது.
12. இதுபோன்று பல காரணங்கள் உண்டு. பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
13. நாம் தவறாக எடுக்கும் முடிவுகள் அடுத்த தலைமுறையை பாதிக்கும்.
14. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பண்டைய காலத்தில் போர் வீரர்கள் இழப்பை தடுக்கும் விதமாக அந்தந்த நாட்டின் மன்னர்கள் மட்டும் மோதிக் கொள்வது போல, இப்போது எல்லா நாட்டினரும் சண்டை போட விரும்பினால் இரு நாட்டு மந்திரிகளுக்குள் ஒரு சண்டையும், அதிபர்களுக்குள் ஒரு சண்டை போட்டி வைத்து முடித்துக் கொள்வது.
15. மேட்ச் ரூல்ஸ் WWF இல் இருந்து எடுத்துக்கொள்வோம், referee வட கொரிய அதிபர்.
16. அனைத்து நாட்டு அதிபர்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழாக்குழுவின் சார்பாக கேட்டு கொள்கிறோம்
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக