அரசியலமைப்பு நம்மைத் தவறவிட்டதா அல்லது மக்கள் அரசியலமைப்பைத் தவறிவிட்டார்களா?
வெள்ளி, 20 டிசம்பர், 2024
அரசியலமைப்பு நம்மைத் தவறவிட்டதா அல்லது மக்கள் அரசியலமைப்பைத் தவறிவிட்டார்களா?
வெள்ளி, 13 டிசம்பர், 2024
ஆப்பக்காரம்மா
ஆப்பக்காரம்மா
எங்கள் ஊரில் ஒரு ஆப்பக்காரம்மா அப்பம் சுட்டு விற்பாங்க.
அப்பத்துக்கு தொட்டுக்க எல்லாம் கிடையாது, ஒரு ரூபாய்க்கு பத்து அப்பம். சில நேரங்களில்
காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவேன். சில நேரங்களில் நெல் கொடுத்து விட்டு அப்பம்
வாங்கி சாப்பிடுவேன். நல்ல குளிர் காலத்தில் இதமாக இருக்கும். எனக்கு ஐந்து அப்பம்
கிடைக்கும். அதை இடது கால் சட்டை பாக்கட்டில் இரண்டு, வலது கை பாக்கட்டில் இரண்டு வைத்துக் கொண்டு
ஒன்றை கையில் வைத்துக் கொண்டு சாப்பிடுவேன். முச்சந்திக்கு போனால் என் நண்பர்கள்
யாராவது இருப்பாங்க. அவர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவேன். அவனுங்களும் வறுத்த
புளியங்கொட்டை, அரிசி இப்படி ஏதாவது கொடுப்பாங்க. நண்பர்களுடன் சேர்ந்து புளியங்காய் அடிச்சி
உப்பு சேர்த்து தரையில் தேய்த்து சாப்பிடுவோம். வாயெல்லாம் புண்ணாகிவிடும், வீட்டில்
திட்டுவார்கள். அதையெல்லாம் எதையுமே காதில் வாங்கும் வயது அப்போது இல்லை.
நான் பள்ளியில்
படிக்கும் போது என்ஜினீயர் மாதிரி வரணும் அல்லது டாக்டர் மாதிரி வரணும்ன்னு
சொல்வாங்க. எனக்கு டாக்டர் மாதிரி ஊசி போடுறது மற்றும் அறுவை சிகிச்சை எல்லாம்
பயம். ஆகையால் என்ஜினீயர் தான் லாயக்கு என முடிவு பண்ணிட்டேன். நான் ஓரளவு நல்லா
படிப்பேன். எனக்கு என்ஜினீயரிங் காலேஜ்ல சீட் கிடைத்தது. திருச்சிக்கு அருகாமையில்
கல்லூரி. அதில் ஆண்களும்
பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி. எனக்கு பெண்கள் கூடவே இருப்பது மிகவும்
ஆசையாக இருந்தது. அதற்காகவே வீட்டில் காசு வாங்கி நல்ல புது துணிகள் வாங்கி
அணிந்து கொள்பவன். அனைத்து பெண்களிடம் வலிய சென்று பேசுவேன். எப்படியாவது
அவர்களின் கவனம் என் மீது படும்படி பார்த்துக் கொள்வேன். வெள்ளிக்கிழைகளில்
தவறாமல் மாலையில் கோவிலுக்கு செல்வேன்.
நான் நினைத்தது
மாதிரியே என்னுடன் படிக்கும்
பெண்கள் வருவார்கள். பெண்கள் வரும்
இடங்களில் நானாகவே சென்று கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வேன். எனக்கு எல்லாருமே
அழகாக தெரிவார்கள். இதில் யாரை தேர்ந்து எடுப்பது என்று ஒரே குழப்பமாக இருந்தது.
அவர்களை சாப்பிட கூப்பிடுவேன், அவர்கள் வர மறுப்பார்கள் ஆனால் நான் கட்டாயப்படுத்தி
அழைத்து செல்வேன். அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டு விட்டு எனது வீட்டிற்கு வருவேன். அப்போது நான் அடையும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி இருக்கையில் அறிமுகம் ஆனவள் தான் சுபா. நாங்க இரண்டு பேரும் அடிக்கடி
சந்தித்து பேசிக்கொள்வது மற்றும் இரவு வெகு நேரம் வரை போனில் பேசிக்கொண்டு
இருந்தோம். இதற்கு இரண்டு பேரும் சேர்ந்து காதல் என்று பேர் வைத்தோம். அந்தந்த
செமஸ்டரில் வரும் பரிட்சையில் பாஸ் செய்து வந்தோம். கல்லூரி நாட்களில் விடுப்பு
எடுத்துக்கொண்டு முக்கொம்பு, ஸ்ரீரங்கம் மற்றும் சினிமா இப்படி பல இடங்களுக்கு
சுற்றினோம்.
கல்லூரியில்
நான்கு நாட்கள் விடுமுறை விட்டார்கள். நான் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று வரலாம்
என்று அவளை கூப்பிட்டேன். அவள் பயந்தாள், வீட்டில் என்ன சொல்வது,
வீட்டில் தெரிந்து
விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள். நான் பல முறை குடும்பத்துடன்
சென்று தங்கி இருப்பதாக சொல்லி, ரொம்ப பாதுகாப்பான இடம், நீ பயப்பட வேண்டாம் என்று சமாதானப்படுத்தினேன். ஒருவாறு வர
சம்மதித்தாள் ஆனால் ஒரே நாள்தான் திரும்பி வந்து விட வேண்டும் என்றாள். எப்படியோ சம்மதித்தாள்,
சரி என்று சொல்லி
வைத்தேன்.
வேளாங்கண்ணி
வந்து சேர்ந்தவுடன் வாடகைக்கு அறை எடுத்து நாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து
விட்டு கடற்கரைக்கு சென்றோம். கடற்கரை மணலில் அவளை சிறிது நேரம் திரும்பி பார்க்காமல் நிற்க வைத்துவிட்டு, நான் சிறிது
தூரம் நடந்து எனது கால் தடத்தை கண்டுபிடி என்றேன். அவளால் முடியவில்லை. அவளின் காலடி
தடங்களை கண்டுபிடி என்றாள்.
கடற்கரை மணலில், உன் காலடித்
தடம் தேடி தொலைந்து போனேன் என்றேன். கவிதை என்றாள். ஆயிரம் பேர் நடந்த மணலில், உன் அழகிய காலடி தடம் எப்படி தவற விட்டேன். கவிதை
எழுதுவீங்களா ?
எப்போதாவது
என்றேன். கடலின் அருகில் சென்றோம்.
அலைகளில் நடந்தோம். அவள் என்னை விட முன்னால் சென்றாள். அவள் துப்பட்டா என்
முகத்தில் பட, நான் அதை பற்றி கொண்டேன்.
கவிதை
எழுதுவீங்களா ?
எப்போதாவது
என்றேன்.
நானும் அவளும் கடலின் அருகில் சென்று ஒருவர் மீது ஒருவர்
தண்ணீர் வீசி விளையாடினோம். ஆர்ப்பரித்து வரும் கடலின் அலைகளை பார்த்து பயந்தாள்.
நான் அவள் கைகளை பற்றி மெல்ல உள்ளே அழைத்து சென்றேன். அலைகள் மேலே எழும்பி வரும்
போது என்னை அணைத்து கொண்டாள். சிறிது நேரத்தில் மேகம் இருட்டிகொண்டு வந்தது.
திடீரென்று ஒரு பெரிய அலை எங்களை வாரி சுருட்டி நனைத்து சென்றது. அவள் உப்பு
கரிப்பதாக சொன்னாள். பின்பு தான் அவள் ஆடை நனைந்து இருப்பதை உணர்ந்தாள். ஆடை
உடலுடன் ஒட்டிக்கொண்டு அவள் அழைகைக் கூட்டியது. அவள் அங்கும் இங்குமாக துணியை இழுத்து
விட்டாள், ஒன்றும்
பயனில்லை. எனக்கு என்னவோ செய்தது. குளிர் காற்றில் நடுங்கினாள். பற்கள் தாளம்
போட்டன. அவள் அறைக்கு போகலாம் மழை வருவது போல இருக்கிறது என்றாள். நான் சொல்ல வேண்டியதை அவள் சொன்னாள். அறைக்கு
சென்றவுடன் தேநீர் வேண்டும் என கேட்க நான் வாங்கி வர சென்று இருந்தேன். திரும்பி
வருகையில் ஏதாவது தேவை என்றால் தான்
வாங்கி வருவதாக ஹோட்டலில் வேலைப்பார்ப்பவர் சொன்னார். சரி என்றேன். அதற்குள் ஆடையை
மாற்றி கட்டிலில் அமர்ந்து இருந்தாள். நான் தேநீர் கொடுத்துவிட்டு எனது ஆடையை மாற்றிக்
கொண்டேன். சிறிது நேரம்
சென்று இரவு உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்து இருந்தோம். மழை ஆரம்பித்தது, உணவும் வந்து
சேர்ந்தது.
உணவு
அருந்திவிட்டு களைப்பாக தூங்க சென்றாள், நானும் அவளருகில் படுத்துக் கொண்டேன். அவள்
தள்ளிப் படுக்கச் சொன்னாள். நான் காதில் வாங்கும் படி இல்லை. அவள் என்னைத் தள்ள, நான் நெருங்க
இப்படியே சென்றது. அவளும் அதை கண்டிப்பாக மறுக்கவும் இல்லை. ஒருவாறு நாங்கள்
சேட்டையை ஆரம்பித்தோம். எப்போது தூங்கினோம் என்று தெரியவில்லை. காலையில் விழிப்பு
வந்து அவளை பார்த்தேன், அவள் நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். நான் வெளியில் சென்று தேநீர் அருந்திவிட்டு அவளுக்கும் வாங்கி வந்து
அவளை எழுப்பினேன். முகம் கழுவிவிட்டு வந்து குடித்தாள். நாங்கள் இருவரும் ஒருவரை
ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவள் என் முகத்தைப்
பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு என்னிடம் பேசவில்லை. எனக்கு எப்படி
சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
அவள் : என் அப்பா, அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான்.
நான் : இதைப் போய் நீ ஏன் அவர்களிடம் சொல்ல போகிறாய்? உனக்கு என் மேல்
நம்பிக்கை இருக்கிறதா? உனக்கு என் மேல்
நம்பிக்கை இருக்கிறதா அல்லது இல்லையா என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டு இருந்தேன்.
சுபா: இருக்கு, ஆனால்...
நான்: நான்தான்
விடமாட்டேனே, நம்பிக்கை இருக்கு தானே அது போதும்
என்றேன்.
எனக்கு அப்போது
அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
சுபா: உன்மேல்
நம்பிக்கை இருக்கு ஆனால் இதெல்லாம் படிக்கும் போது அதுவும் கல்யாணத்துக்கு
முன்னாடி எல்லாம் செய்வார்களா?
இது என்னடா வம்பா
போச்சி, எப்படி
சமாளிக்கலாம். சரி, இப்படி போடுவோம்.
நான்: உனக்கு
என்மேல் நம்பிக்கை இருக்குல்ல அப்புறமென்ன ?
சுபா: இதெல்லாம்
சரி பட்டு வருமா?
பாருங்க! எப்ப போய் சரி, தவறை யோசிக்கிறாள்.
சரிவிடு, கல்லூரி
முடித்தவுடன் கல்யாணம் பண்ணிக் கொண்டு, நம்மை யார் யார் எல்லாம் கேவலமா பார்த்தாங்களோ அவங்களுக்கு முன்னாடி நாம
வாழ்ந்துக் காட்டணும் என்றேன் (எங்கள யார் இப்ப கேவலமா பார்த்தா? சும்மா ஒரு பிட்
போட்டேன்). கோவிலுக்கு போகலாம் என்று கிளம்ப
சொல்லி அழைத்துக் கொண்டு சென்றேன். அவள் கைகளை பற்றிக் கொண்டு நடந்து சென்றோம்.
ஒன்றும் கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப் படாமல் இரு. ஒரு
வழியாக அவளை சமாதானப்படுத்தி விட்டேன். ஒரே ஜாலி தான் (இங்க எந்த கோவிலென்று சொல்ல வில்லை, இதை போட்டு
குழப்பிக் கொள்ள வேண்டாம்). அதற்கு பிறகு
நாங்கள் எங்கும் வெளியில் செல்ல வில்லை. அதே அறையில் அடைந்து கொண்டோம். வேறு எந்த
நியாபகமின்றி புது மணத்தம்பதிகள் போல இருந்தோம். விதவிதமான உணவுகளை தேர்வு செய்து
உண்டோம். சில சமயங்களில் உணவு காய்ந்து கிடந்தது. இப்படியே நான்கு நாட்கள்
சென்றது. வாடகை அறையை காலி செய்து விட்டு கிளம்பினோம்.
கடைசியாக அவள்
என்னிடம், என்னை திருமணம்
செய்து கொள்வாயா? என்றாள். இது என்ன கேள்வி? இந்த மாதிரி கேட்டால் நான் உன்னிடம் பேச மாட்டேன் என்று
பொய்யாக முறைத்துக் கொண்டேன். இது போன்று இனிமேல் பேச மாட்டேன் என்று என்னை
சமாதானம் செய்தாள். மூன்றாவது செமஸ்டர் பரிட்சை முடிந்து நாங்கள் இருவரும் அவரவர்
வீட்டிற்க்கு வந்து சென்றோம். வீட்டிற்க்கு வந்து சேர்ந்து விட்டதாக அலைபேசி மூலம்
சொன்னாள். நான் இன்னும் சிறிது நேரத்தில் ஊர் வந்து சேர்ந்து விடுவேன். ஏன் இவ்வளவு தாமதம் என்றாள். இடையில் டிராபிக்
ஜாம், இப்ப தான் வண்டி
போகுது என்றேன்.
சுபா: சரி, இனி என்னை நீ கூப்பிட வேண்டாம். நான் வீட்டில்
யாரும் இல்லாத போது பேசுகிறேன்.
பேருந்து வேகமாக
சென்று கொண்டு இருந்தது. நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென்று வண்டி ஒரு
குழியில் விழுந்தால் தூக்கி போட்டு எழுந்தேன். கடைசியாக ஊர் வந்து சேர்ந்தேன்.
வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்தேன் . கதவு திறந்தது,
ஒரு அழகான பெண் நின்று
கொண்டிருந்தாள். வாங்க! என்று சிரித்தாள். அப்படி ஒரு அழகு. (சில பேர் வீட்டிற்கு
போனால் அவர்கள் முகத்தை பார்த்தால் ஒரு வாரம் சாப்பிட முடியாது. அடுத்த முறை
அவர்கள் வீட்டிற்கு செல்வது என்றால் எனக்கு பயமாக இருக்கும்).
நீ யாரென்றேன்.
லஷ்மியின்(என் தங்கை) தோழி, என் பெயர் மயில் என்றாள்.
அந்த விடி காலைப் பொழுதிலும் குளித்து விட்டிருந்தாள். நைட்டி அணிந்திருந்தாள், தலையை துண்டால் கட்டி இருந்தாள். எங்கே லஷ்மி, அப்பா , அம்மா? என்றேன். லஷ்மி
குளித்து கொண்டிருக்கிறாள். அத்தையும் மாமாவும் கடைக்கு சென்று இருக்கிறார்கள்.
உங்களுக்கு டீ அல்லது காபி வேண்டுமா எனக் கேட்டாள்.
காபி என்றேன். அதற்குள் பல் விளக்கிவிட்டு, முகம் கழுவி வந்தேன். துண்டு என் முன்னால்
நீட்டினாள் . "தாங்க்ஸ்" என்றேன்.
இதற்கெல்லாம் தாங்க்ஸ் சொல்வார்களா?, இரண்டே நிமிடம் காபி ரெடி என்றாள்.
விரல்களில்
மெருன் கலர் நகப்பூச்சு, அது அவளுக்கு நன்றாக இருந்தது. அண்ணா, வந்துட்டியா? இது என் பெஸ்ட்
ப்ரெண்ட், “மயில்”. அது என்ன மயில், பழைய பெயர்
மாதிரி இருக்கு என்றேன். இவள் குழந்தையில் அழகாக இருப்பாளாம், அதனால் இவளுக்கு மயில் என்று பெயர் வைத்து
இருக்கிறார்கள். ஆனால் இவள் மயிலை விட அழகாக இருக்கிறாள் என்றேன். மயில் சிரித்து
சிவந்தாள். குளிச்சுட்டு வாங்க டிபன் சாப்பிடலாம் என்றாள் மயில்.
நான்: இரு, அம்மா வரட்டும்.
லஷ்மி: அண்ணா, இவள் நன்றாக
சமைப்பாளாம், அது மட்டுமல்ல இன்றைக்கு இவள் தான் சமைக்கப் போகிறாள்.
எனக்கு எப்படி
இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. இப்போதான் ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகிக்
கொண்டு இருக்கிறேன். ஆனால் இங்கே இவ்வளவு அழகான பெண் வீட்டில் இருக்கிறாள். என்
தங்கையோடு ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கி படிக்கும் நெருங்கிய தோழி. மயிலிடம் என்னைப்
பற்றி நிறைய சொல்லி வைத்திப்பதாக சொன்னாள்.
லஷ்மி : நீ நன்றாக பாடுவாய் ,
நீ ஆடை அணிந்தால் சூப்பரா
இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.
பெண்கள் கூட
படிக்கும் பெண்ணிடம் தன் அண்ணைப் பற்றியோ, தம்பியை பற்றியோ
அல்லது வேறு ஏதாவது ஒருவரைப் பற்றி பேசி ஒரு பில்டப் கொடுத்து அவர்களுக்குள் ஒரு
கனெக்சன் கொடுத்து வைப்பார்கள். இது பெரிய தவறு. அதை தீர்மானிக்கும் வயதோ, பக்குவமோ, அவர்களில் இருக்குமோ அல்லது ஒருவருக்கோ
இல்லாமல் இருக்கலாம். இது ஒரு இனக்கவர்ச்சி மட்டுமே ஆனால் அதை அவர்கள் உன்னதமான
காதல் என்று எடுத்துக் கொண்டு பின்பு வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு பின்னாளில்
கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது மனது கஷ்டமாக இருக்கும். எந்த வேலையும் இல்லாமல்
கல்யாணம் செய்து கொண்டு இரண்டு பேரின் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளாமல் மிகுந்த
சிரமத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். சில சமயங்களில் நன்றாக
இருப்பவர்களும் உண்டு. நாம் யாரும் அவங்க வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது.
அவங்கதான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும்.
நான் சும்மாவே
பெண்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே இருப்பேன் ஆனால் வீட்டிலேயே அழகான பெண், நான் எங்கேயும்
வெளியில் நண்பர்களை சந்திக்கச் செல்லவில்லை. நண்பர்கள் போன் செய்து அழைத்தார்கள்.
நான் வேலையாக இருக்கிறது என்று துண்டித்து விட்டேன். மயில் சமைத்துக்
கொண்டிருந்தாள். நானும் தங்கையும் அவளுடன் பேசிக்கொண்டிருந்தோம். கூடவே மொக்கை
ஜோக் சொல்வேன். அதற்கும் சிரிப்பாள். எனக்கு அவளின் நட்பு தேவையாக இருந்தது. இது
போல உதவி தங்கை லஷ்மி செய்வாள்
என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை.
மதிய உணவு
சாப்பிடும் போது ஏகத்துக்கும் புகழ்ந்தேன். அவள் சிரித்துக்கொண்டே பரிமாறினாள்.
சாப்பிட்டவுடன், மயிலை
எப்படியாவது வெளியில் அழைத்து் கொண்டு செல்லலாம் என யோசித்தேன்.
நான் : மயில், வெளியில் சுற்றிப் பார்க்கப் போகலாம் வருகிறாயா?.
அதற்குள் தங்கை
ஷாப்பிங் போகலாம் என்றாள். சில சமயங்களில் எனக்கு சாதகமாகவே அவள் முடிவு
எடுப்பாள். பக்கத்து வீட்டில் இருந்து ஸ்கூட்டர் வாங்கி வந்தாள். நான் அப்பாவின்
பைக்கை எடுத்துக்கொண்டு மயிலை என் வண்டியில் ஏற்றிக்கொண்டேன். அவளைப் பார்ப்பதும்
சிரிப்பதும்மாய் இருந்தேன். ஆளுக்கு ஒரு டிரஸ் வாங்கி கொடுத்தேன். இரவு
சாப்பிட்டுவிட்டு வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம், சுமார் மூன்று மணிவாக்கில் தூங்க சென்றோம்.
மயில் காலையில்
எழுந்து என் அம்மாவிற்கு ஓய்வு அளித்து விட்டு எல்லா வேலையையும் இழுத்து போட்டு
பார்த்து விட்டு அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். என் வீட்டில் அனைவருக்கும்
அவளை பிடித்து இருந்தது(அதாவது நம் வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் காலை பத்து
மணி வரை தூங்குவது அதே நம் வீட்டிற்கு திருமணம் ஆகி வரும் பெண் காலையிலேயே எழுந்து
வீட்டு வேலை செய்ய வேண்டும்).
சுபாவிடம்
இருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்கள், அதில் ஒரு மெசேஜ்
அவள் கல்லூரிக்கு செல்வதாகவும் என்னையும் உடனடியாக வரச்சொல்லி இருந்தாள். நான்
காலை உணவை முடித்துவிட்டு கிளம்ப தயாரானான். அவசரமாக கல்லூரியில் வேலை இருக்கிறது
என்றேன். மயிலின் தொலைபேசி எண்ணை பெற முயற்சித்தேன் ஆனால் கிடைக்கவில்லை.
கல்லூரிக்கு
வந்து சேர்ந்தேன். தங்கையிடம் இருந்து போன், மயிலிடம் பேசு என்று கொடுத்தாள். அவசர வேலை
அதான் வந்து விட்டேன், உன்னை விட்டு வந்தது எனக்கு என்னவோ செய்கிறது, உனக்கும் அதுபோல
இருக்கிறதா?
மயில்: இல்ல, நீங்க அவசரமாக
கிளம்பி விட்டீர்கள்! அதான்.
நான் : அதனால்
கஷ்டமாக இருக்கிறதா? எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு. உனக்கு என்னை
பிடிச்சிருக்கா?
மயில்: எனக்கு
தெரியவில்லை.
தங்கையிடம் போனை
கொடுத்து விட்டாள். சுபா வாடகை எடுத்து தங்கி இருக்கும் வீட்டிற்கு வரச் சொன்னாள்.
அங்கு சென்றதும் என்ன அவசரம் என்றேன்.
சுபா : இல்ல, நீ போனை எடுக்க
வில்லை என்றதும் பயந்து விட்டேன்.
அடிப்பாவி! இதற்காகவா
வரச் சொன்னாய், மயிலின் போன் நம்பர் கூட வாங்காமல் வந்து விட்டேன் என்று மனதுக்குள்
நினைத்துக் கொண்டேன்.
நான்: சாப்பிட
என்ன வேண்டும்?
சுபா: இரண்டு
சிக்கன் ரைஸ்
நான் : நான்
ரூமுக்கு போய் சாப்பிடுகிறேன்.
சுபா : இல்லை, நீ என்னுடன்
தங்கு, காலையில்
போகலாம்.
எனக்கு சொல்லவா
வேண்டும், வயிற்றுப் பசி
மற்றும் உடற்ப்பசி தீர்த்துக் கொண்டோம். இப்படியே எங்களுக்கு எந்த ஒரு குற்ற
உணர்வுமே இல்லை. என்னை முழுமையாக நம்பினாள். எனக்கு என்ன கவலை. அதன்பிறகு நாட்கள்
செல்ல செல்ல அவளுடன் தங்குவது வெகு சாதாரணமாகிப் போனது. சில சமயங்களில் கர்ப்பமாகி மாத்திரை மூலம் சரி
செய்து கொண்டோம்.
வெள்ளிக்கிழையன்று
அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு கிளம்பி விடுவேன். என் தங்கையிடம்
சொல்லி மயிலை அழைத்து வரச் சொல்வேன். இரண்டு நாட்களும் மயிலுடன் மகிழ்ச்சியாக இருப்பேன்.
மயிலின் தொலைபேசி எண் கிடைத்தது. அடிக்கடி அவளுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
இப்போது நான் சொல்வதை கேட்கும் நிலையில் இருந்தாள்.
நான் : அடுத்த
வாரம் நீ ஊருக்கு வர வேண்டாம். நான் உன்னை அழைத்து செல்கிறேன்.
மயில் : வீட்டில்
கேட்டால் என்ன சொல்வது ?
நான் : மற்றொரு ப்ரெண்ட் வீட்டில் தங்குவதாக சொல்லிவிடு.
(தங்கையும் மயிலும் வேறொரு ப்ரெண்ட் வீட்டில்
தங்குவது வழக்கம், எனவே யாருக்கும்
சந்தேகம் வர வில்லை).
மயிலையும்
வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றேன். அதே பழைய ஹோட்டலில் ரூம் போட்டேன் ஆனால் அந்த ராசியான அறை எனக்கு கிடைக்கவில்லை. அதற்கு
பக்கத்து அறை தான் கிடைத்தது. அவள்
குளித்துவிட்டு அப்போது பூத்த மலராக தெரிந்தாள். நான், நெருங்கி அவள்
கைகளை பற்றி என்னுடன் இழுத்தேன். அவள் விலகினாள். எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு
தான் என்றாள். நான் இறுக பற்றிக் கொண்டேன். ஒருவாறு சரிந்தாள், எல்லாம்
முடிந்தது. ஒருத்தியை நாசம் செய்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. எனக்கு
எல்லாமே என் சுயநலம், செக்ஸ் மட்டுமே, அது மட்டுமே எனக்கு தெரியும். பயத்தில் படுத்து
இருந்தாள், நான் அவளை சமாதானம் செய்தேன்.
லஷ்மி, மயில் வார இறுதி
நாட்களில் லஷ்மியின் வீட்டில் தங்காதது குறித்து ஒருவித வருத்தில் இருந்தாள். அதை
புரிந்து கொண்டு நான் மெதுவாக மயிலை விருப்புவதாகவும், நானே அவளை வெளியில் அழைத்துக்கொண்டு சென்றேன்.
அதனால் தான் அவள் உன்னுடன் வரவில்லை. கோபித்துக் கொள்ளாதே. தங்கைக்கு மிகவும்
மகிழ்ச்சி, அவள் தோழியை நான் மணப்பதில். நாங்கள் இருவரும் வெளியில் செல்லும் போது நீ அவள்
நம் வீட்டில் இருப்பதாக சொல்லிவிடு என்றேன். உங்கள் கல்லூரி முடிந்தவுடன் திருமணம்
செய்து கொள்கிறேன். தனக்கு பிடித்தமான தோழி அண்ணியாக வரப்போவதை நினைத்து மிகவும்
மகிழ்ச்சி அடைந்தாள். பின்பு மயிலுக்கு போன் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெகுநேரம்
பகிர்ந்து கொண்டார்கள். மயிலை கூட்டிக்கொண்டு வெளியில் சுற்ற ஆரம்பித்தேன்.
அவளுடன் மிகவும் நெருக்கமாக திளைத்திருந்தேன். சனி, ஞாயிறு மயிலுடன் பொழுது கழிந்தது, மற்ற வார
நாட்களில் சுபாவுடன் கழிந்தது
அவர்களின்
கல்லூரி முடிந்தது. லஷ்மி, மயிலின் வீட்டிற்கு சென்று திருமணப் பேச்சை ஆரம்பித்து என்
பெற்றோர் துணையுடன் முடித்தும் வைத்தாள். இருவர் வீட்டிலும் பேசி முடித்தவுடன்
மண்டபம் புக் செய்யப்பட்டு, பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு, விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
மயிலுடன்
வெளியில் தங்குவது என் தங்கைக்கு தெரியும். மயிலின் வீட்டில் என் வீட்டில்
இருப்பதாகவும், நான் தேர்வுக்கு
படிப்பதாக என் பெற்றோர்களும் எல்லா பெற்றோர்களை
போலவே நினைத்து கொண்டார்கள்.
நான் ஊருக்கு
வந்தவுடன் துணி எடுக்க எல்லோரும் கிளம்பினோம். அடுத்த நாள் நகை எடுக்க சென்றோம்.
நான் கல்லூரியில் இருந்து வந்ததில் இருந்து சுபாவின் போனை எடுக்க வில்லை, ஏகப்பட்ட மிஸ்டு
கால்கள்.
இரண்டு நாட்களாக
கவனித்தேன், மயில் சோகமாக இருந்தாள். லஷ்மியை அவளது வீட்டிற்கு அழைத்து சென்று தான்
கர்ப்பமாக இருப்பதாக சொல்லி, யாருக்கும் தெரியாமல் கலைத்து விடுவோம் என்றும் தான்
வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து வேலை செய்ய வில்லை என்று பதறி
இருக்கிறாள். சே சே நீ என்ன பேசுகிறாய்.
நீ எனக்கு அண்ணியாக வர போகிறாய். அதுமட்டுமல்ல என் உயிர் தோழி, நான் இருக்கிறேன். கல்யாணத்திற்கு இன்னும்
மூன்று வாரங்களே உள்ளன. ஆகவே நீ கவலைப்படாதே. நான் வீட்டிற்கு சென்று எனது துணிகளை
எடுத்து வருகிறேன். சில நாட்கள் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லி விட்டு
வந்தாள்.
காலையில் என்னை
பார்த்தவுடன் Congratulations! நீ அப்பாவாகப் போகிறாய் என்றாள் (இதைப்போல யாரும் தன் தங்கையிடம் திருமணத்திற்கு முன் நீ
அம்மா ஆக போகிறாய் என்று சொல்ல முடியுமா?).
நான்
திருமணத்தில் ஒன்றி விட்டேன். சுபாவின் போன் அழைப்புகளை எடுக்கவில்லை. சுபா, அவள் சித்தப்பாவிடம் எங்கள் காதலை சொல்லி என்
வீட்டில் திருமணம் சம்பந்தமாக பேசச் சொல்லி அனுப்பி
வைத்திருக்கிறாள். அவர் ஊருக்கு வந்து என் வீட்டை ஒரு பாட்டியிடம் விசாரித்து
இருக்கிறார். அந்த பாட்டி வேறு யாருமில்லை, சிறு வயதில் அப்பம் சுட்டு விற்று வந்தவள் தான். பாட்டி
என்ன விஷயமாக என்று விசாரிக்கிறீர்கள் என கேட்க, திருமணம் சம்பந்தமாக விசாரித்துப் போக வந்தேன்
என்று மொட்டையாக சொல்கிறார். அந்த
பெண்(லக்ஷ்மி) கிடைப்பதற்கு கொடுத்து
வைக்கணும், அவளை சிறு வயது முதல் தெரியும் என்கிறாள். பையனுக்கு
இன்னும் மூன்று நாட்களில் கல்யாணம் என்று சொல்லிவிட்டு தான் வேலை பார்த்து வரும்
லேடீஸ் ஹாஸ்டல் வேலைக்கு செல்கிறார். இரவு வேலை முடிந்து வரும் போது இந்த செய்தியை
அவர்களிடம் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டு செல்கிறாள்.
கல்யாணத்திற்கு
இரண்டு நாட்கள் இருக்கையில் சுபாவிடம் இருந்து ஒரு மெசேஜ்,
எனது வாடகை வீட்டை காலி
செய்ய வேண்டும், நீ வந்து என்னோடு இரவு தங்கி விட்டு, காலையில் என் பொருட்களை வண்டி பிடித்து ஏற்றி
விடுமாறு அனுப்பி இருந்தாள். சான்ஸ் மறுபடியும் வருகிறது. மிஸ் பண்ண கூடாது.
பேருந்தில் போனால் அப்பா எங்கு செல்கிறாய் எனக் கேட்பார், ஆகையால் பைக்கை எடுத்துக் கொண்டு நண்பரை பார்த்து
வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றேன். அதேவேளை பாட்டி லேடிஸ் ஹாஸ்டல் வேலை முடித்துவிட்டு பேருந்தின் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கின்றார். அவள் நிற்கும் வழியாகத்தான் நான் செல்ல வேண்டும்.
அப்போது அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவன் என்னுடன் பைக்கில் வருகிறாயா? என்று கேட்கிறான். அவள் தன் வாழ்நாளில்
பைக்கில் ஏறியது கிடையாது. ஆனால் இன்று பைக்கில் ஏறி வீடு திரும்பி
கொண்டிருக்கிறாள்.
முன்பு ஒருமுறை நான்
பேருந்தில் உறங்கிக்கொண்டு வரும் போது ஒரு குழியில் விழுந்து தூக்கி போட்டு
தூக்கம் கலைந்தது நினைவிருக்கலாம்.
அதே குழியில்
விழுந்து எழுந்ததில் பாட்டி பைக்கின் பின்னாலிருந்து கீழே விழுகிறாள். பின்னால்
வந்த லாரி அவளின் தலைமேல் ஏறி, தன் வாழ்நாள் எல்லாம் அப்பம் சுட்டு கொடுத்தவளின் தலையை
அப்பம் போல் நசுக்கி விட்டிருந்தான். நான் அப்போதுதான் அந்த விபத்து
நேர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். நான் போற வேலை என்ன, போய் அவளின் மேல் புரண்டு உருளனும். இதில்
விபத்து ஆகி இருக்கிறவங்கள பார்க்கிறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை.
ஒரு வழியாக வந்து
சேர்ந்தேன், ஒரு மாதமாக உடலுறவு இல்லாமல் இருந்ததால் வெறித்தனமாக இருந்தேன். காலையில் கதவு
தட்டும் சத்தம் கேட்டது, சுபா போய் கதவை திறந்தாள். அழகை சத்தம், அவளது அண்ணன்
சேகர், சித்தப்பா
மற்றும் சில உறவினர்கள், இவன் பலவந்தப்படுத்தி கெடுத்து விட்டான் என்று அழுகிறாள்.
நானும் அவளும் இருந்த கோலமே போதும் சாட்சியே தேவையில்லை. அவளை உடையை மாற்றச்
சொல்லி சித்தப்பா அழைத்துச் சென்றார். என்னை அந்த வீட்டில் வைத்து அன்று
அடித்தார்கள், என்னை விட்டு விடுங்கள் நாளை
எனக்கு திருமணம் என்றேன். அந்த மயிரு எங்களுக்கு தெரியும் என்று சொல்லி வாயிலே
ஒன்று வைத்தான்.
சேகர் அடிக்கடி
வெளியில் சென்று போனில் பேசிட்டு வந்தான். அப்பாடா! ஒருவழியாக பிரியாணி வந்தது. ராத்திரி வேண்டாம், காலையில் கிளம்பு
என்று சேகர் சொன்னான். நான் சாப்பிட்டவுடன் நைசாக போனைத் தேடினேன். உன்னோட போன்
என்னிடம் பத்திரமாக இருக்கு பேசாம தூங்கு என்றான் சேகர். சாராயம் வாங்கி வந்து குடித்தார்கள். சார், நாங்க தண்ணி
அடிச்சட்டு இருக்கோம், அதனால நீங்க
தப்பிக்க நினைச்சீங்க! அங்க சாத்தி
வச்சி இருக்கிற இரண்டு கட்டையை காட்டினான். அதற்கு அப்புறம் தப்பிச்சு போனும் என்ற
நினைப்பு வரல.
காலைல எழுந்ததும்
குளிச்சிட்டு வரச் சொல்லி வேற ஒரு டிரஸ் கொடுத்தார்கள், சுபா மற்றும் உறவினர்கள் வந்தாங்க. மாலையைப்
போட்டுக்கச் சொல்லி சொன்னாங்க. நான் அடம் எதும் பிடிக்கல,
ஏன்னா சொல்றத கேட்கலனா கட்டை தான் பேசும்
என்றான் . தாலி கட்டியாச்சு, அங்கிருந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் அனைத்தும்
முடிந்தது. எனக்கு ஒரு இடத்தில் அமைதியாக நடக்க வேண்டிய திருமணம், வேறொரு இடத்தில்
கொஞ்சம் அடியோடு நடந்து முடிந்தது.
சேகர், உன் அப்பாவிடம்
பேச வேண்டும் என்றார். போன் நம்பர் கொடுத்தேன் சிறிது தூரம் சென்று
பேசிவிட்டு, எல்லோரையும் அழைத்துக்
கொண்டு கிளம்பினார். எனது வீட்டிற்கு
சென்றோம்.
எனக்கு தெரியும்
வீடு, ஒரே களேபரமாக இருக்கும்.
ஏதோ தப்பா நடக்க போகுதுனு உள்மனசு சொல்லியது. நினைச்ச மாதிரி ஒரே கூட்டமாக
இருந்தது. வேனை விட்டு இறங்கி தயங்கியபடி வீட்டிற்கு போனேன். சிலர் ஒப்பாரி வைத்து
வச்சு அழுதார்கள், சிலர் என்னை
வைதார்கள். ஏதோ எரிஞ்சு கிடந்தது. யார் அந்த கயிற்றை மாட்டினார்கள் என்றும்
தெரியவில்லை. மயில், அவளின் அம்மா, என் அம்மா எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள், அப்பாவும் சொந்தக்
காரங்களும் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தை கொஞ்சம் நகர சொல்லிவிட்டு
லஷ்மியிடம் குனிந்து டேய்! லஷ்மி என்றேன்.
அவ மிக கேவலமா பார்த்தாள். அப்படியே தலையை சாய்த்து விட்டாள்.
இரண்டு நாட்களாக
என்னை காணோம் என்றவுடன், எங்கெல்லாமோ தேடி திருமணத்தன்று வராமல் போனவுடன் வீட்டில்
பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. உங்கள் பையன் எங்கு இருக்கிறான் என்று சண்டை
போட்டு இருக்கிறார்கள். மயில், என் தங்கையிடம் உன் அண்ணன் யோக்கியதைப் பார்த்தாயா? என் வாழ்க்கையை
நாசமாக்கிவிட்டான் . உன் அம்மா, அப்பா கோழைகள், இந்த மாதிரி பையனை பெற்றதற்கு எனக்கு விஷம்
வைத்து கொன்று இருக்கலாம். என் அம்மா, அப்பாவிற்கு பிறகு நீ தான் உலகம் என்று
இருந்தேனே. என் வாழ்க்கையை இப்படி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டாயே, நீ எல்லாம் ஒரு ப்ரெண்ட்?. நல்லா நடிச்சு
என்னை நாசம் பண்ணிட்டீங்களே! என்று
தங்கையிடம் சண்டை போட்டு இருக்கிறாள். அதைத் தாங்காமல் தூக்குப் போட்டு கொண்டாளாம். அவளை கவனிப்பதற்கு முன் குரல்வளை உடைந்தும்
கழுத்து திருகியும் லேசாக உயிர் இருந்து இருக்கிறது. எல்லோரும் மருத்துவமனைக்கு கூப்பிட்டும், அவள் போக வில்லை.
எனக்காக கடைசி உயிரை பிடித்து கொண்டு இருந்திருக்கிறாள்.
அப்பா, கொஞ்சம் நான்
பேசுவதை கவனியுங்கள் என்றார். என்னிடம், என் மகளுக்கு ஆக வேண்டிய காரியம் செய்து
ஆகவேண்டும், நீ இந்த ஊரில் இருந்து
கிளம்பு என்றார். மயிலின் அப்பாவிடம் சென்று என் மகளை அடக்கம் செய்ய வேண்டும் தயவு
செய்து தொந்தரவு செய்யாமல் கிளம்புங்க என்றார். சேகரிடம் சென்று சுபாவின் பற்றிய
உறவு எனக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது, என்னை மன்னியுங்கள் என்றார்.
சேகர்
எல்லோரையும் அனுப்பிவிட்டு, அங்கேயே இருந்து சடங்குகள் முடியும் வரை இருக்கிறார்.
சில நாட்களுக்கு என் அப்பா பிறகு மயிலின் வீட்டிற்கு சென்று
அவள் காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறார். சேகர் மயிலிடம், உனக்கும் அவருக்கும் உள்ள உறவு எனக்கு
தெரியாது. என் தங்கையை ஏமாற்றியதால் நான் அவரை அடைத்து வைத்து திருமணம் செய்ய
வேண்டியதாயிற்று என்று மன்னிப்பு
கோருகிறார்.
லட்சுமியின்
அப்பா தான் இதுவரை சம்பாதித்த விவசாய நிலங்கள் எண்பது ஏக்கரையும் மற்றும் இரண்டு
வீடுகளையும் மயிலுக்கு எழுதிக் கொடுத்து விடுகின்றார்.
மயிலின் குழந்தையை சுபாவும், சேகரும் அடிக்கடி வந்து பார்த்து
செல்கிறார்கள். சுபா மற்றும் சேகரின்
ஏற்பாட்டில் மயில் மறுமணம் செய்து கொள்கிறாள்.
சுபா அவள் அண்ணன்
சேகருடன் வசித்து வருகிறார்கள்.
மயில் தனது
கணவருடன் என் தந்தை மற்றும் தாயுடன் என் வீட்டில் “இல்லை” மயிலுக்கு
சொந்தமான வீட்டில் வசித்து வருகிறாள்.
ஆப்பக்கார
பாட்டியின் கொலையை செய்த சாலையை சரியாக பராமரிக்காத அதிகாரிகள் அதை விபத்தாக
மாற்றி விட்டார்கள். எத்தனையோ அதிகாரிகளாலும் மற்றும் அமைச்சர்களாலும் மூட முடியாத
குழி பாட்டியின் சாவிற்கு பின் மூடப்பட்டுள்ளது.
விருந்து -
விருந்து - நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக...
-
ரானடே, காந்தி, ஜின்னா முகவுரை மறைந்த நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே அவர்களுடைய 101 வது பிறந்தநாள் 1943 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி அன்று ப...
-
This is an email sent to all Hon'ble Judges of the Indian Supreme Court. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், நான்கு முஸ்லிம் இற...
-
போரின் தாக்கம் இந்தியா பாகிஸ்தான் போர் என்று வந்தால் ஒருநாள் தாங்காது பாகிஸ்தான் என்று கூறி வருகிறார்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவு - அமெரி...