பள்ளி ஆண்டு விழா
எனக்கு பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது விழாக்களிலோ கலந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததில்லை. எனக்குள் இருக்கும் பயம் காரணமாக இருக்கலாம்.
என்னால் மற்றவர்களுக்கு பிரச்சினை இருக்காது.அதுபோல மற்றவர்களால் எனக்கும் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்வது.மற்றவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் தாக்காவிட்டாலும் கூட அவர்களின் செயல்களே என்னை அதிக அளவில் அதிர்ச்சியடைய வைக்கிறது.நான் பல வழிகளில் தப்பிக்க முயற்சி செய்து வருகிறேன் ஆனாலும் பல தடவைகள் மாட்டிக்கொண்டு விடுகிறேன் ஆகவே சமீபத்தில் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது. தின்பண்டங்கள் விற்பதாகவும் குறிப்பு இருந்தது. ஏதாவது விதவிதமாக தின்பண்டங்கள் இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் சென்றேன். முதலில் சமோசா மற்றும் காப்பி சாப்பிட்டேன். காலையில் செய்து இருப்பார்கள் போல இருந்தது. சரி என்று பொறுத்துக் கொண்டேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் வழியில் சந்தித்தேன், மைக்கில் பேசுவது மைக்கில் பேசிக் கொண்டிருப்பது யார் என்று தெரிகிறதா? என்றார். அப்போது திரைஇசை பாடல் ஓடிக்கொண்டிருந்தது. என் மனைவி தான் பேசுகிறார் என்றார். சரி சார், நான் கேட்கிறேன் என்றேன். மிகவும் நல்ல மனிதர். சிறிது நேரத்தில் அவரது மனைவி பேச தொடங்கினார். அவர் அமெரிக்கன் இங்கிலீஷில் பேசிக் சிறப்பு விருந்தினரை பேச அழைத்தார்.
சிறப்பு விருந்தினரை பேச அழைத்ததும் எனது உடல் நடுங்கியது, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது, கை கால்கள் உதறல் கொடுத்தது. எனக்கு இதுபோல அடிக்கடி ஏற்படும். எனக்கு பிடிக்காத விஷயங்கள் அல்லது ஏதாவது ஒன்று நடக்கப் போகிறது என்பதை என் உள்ளுணர்வு சொல்லும் அறிகுறி தான் இது.
ஒரு மகளிர் கல்லூரியின் முதல்வரை பேச அழைத்திருந்தார்கள். அவர் தனது குடும்பத்தை பற்றி பேசினார். அடுத்தது தனது படிப்பு பற்றி பேசினார். 30 வருடங்களாக வேலை பார்ப்பது பற்றி சொன்னார்.
பேசும்போது இனிப்பு, அல்வா மற்றும் ஜாக்கெட் போன்ற வார்த்தைகளை உதாரணமாக சேர்த்துக்கொண்டார். அவரது உருவத்தை பின்னணியில் இருக்கும் திரையில் காண்பித்துக் கொண்டிருந்தார் கேமராமேன். தரையில் நின்று கொண்டு மேடையின் மேல் இருந்து பேசுபவரை திரையில் காண்பிக்கும்போது கேமராமேன் குளோசப் சாட் எடுக்கிறேன் பேர்வழி என்று சிறப்பு விருந்தினரின் வாய்க்குள்ளும் மூக்கில் உள்ளும் கேமரா சென்று வந்தது.
முதலில் பிள்ளைகளுக்கும் அடுத்த பெற்றோருக்கும் அறிவுரை கூறிக்கொண்டு இருந்தார். அவர் மைக்கின் மிக அருகில் சென்று பேசியதால் ஒலிபெருக்கி அலறி எனக்கு தலைவலியும் நெஞ்சு வலியும் சேர்ந்து வந்தது, மீண்டும் தின்பண்டங்கள் விற்கும் இடம் வந்து சேர்ந்தேன்.
தின்பண்டங்கள் விற்கும் இடங்களில் பெற்றோர்கள் குவிந்து இருந்தார்கள். பள்ளி மாணவர்களை காணோம். என் பிள்ளைகளையும் காணவில்லை. அது பற்றி விசாரிக்கும் போது தான் தெரிந்தது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நிகழ்ச்சிகளை பார்க்கவோ அல்லது பெற்றோருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவும் அனுமதி இல்லை. அது மட்டும் இன்றி மாணவர்களை அவரவர் அறைகளில் இருந்து வெளியே வராதவாரு பெஞ்சை வைத்து அடைத்து வைத்திருந்தார்கள்.
சுமார் இரவு 9:30 மணிக்கு மேல் நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொரு வகுப்பறையில் இருந்தும் மாணவர்களை அனுப்பி வைத்தார்க. எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களில் வெளியில் வரும்போது நெஞ்சு வெடித்து விடுவது போல் ஒரு வலி, இவ்வளவு நேரம் எப்படி இந்த சிறிய மாணவர்களை அடைத்து வைத்திருந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு ஏதாவது சிற்றுண்டி வழங்கினார்களா என்றும் தெரியவில்லை.
அதேநேரம் பள்ளியின் மாடியில் இருந்து பட்டாசு வெடிக்க தொடங்கினார்கள். அவற்றிலிருந்து நெருப்பு கீழே கொட்டியது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக காத்து இருந்தார்கள். ஒவ்வொரு மாணவர்களாக வந்து சேர்ந்து கொண்டு இருந்தார்கள். அங்கு நின்று கொண்டிருந்த பள்ளியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர்களிடம் தெரிவித்தேன் அவர் ஏதும் கண்டுகொள்ளவில்லை அதன் பின் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தார்கள் எனக்கு அப்பொழுது கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்து ஞாபகம் வந்தது மிகவும் மோசமாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினேன் வெளியே சென்று பள்ளி நிர்வாகி ஒருவரை சந்தித்து ஏன் இவ்வளவு சத்தமாக வெடிக்கிறார்கள் என்றேன் அப்போது தானே அவர் பக்கத்தில் இருக்கிற பள்ளியில் இருப்பவர்களுக்கு தெரியும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக