ஞாயிறு, 11 ஜனவரி, 2026

விருந்து -

 

விருந்து - 

நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக்காது ஆகையால் 1 மணி நேரம் முன்னதாகவே சென்றேன். எங்களுக்கு முன் 4 பெண்கள் selfi எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நான் மின் விசிறி இருக்கும் இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். ஓரு மணி நேரம் சென்று எனக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. 


எனது மகனிடம் சொல்லி கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று அனுப்பினேன். அவன் எங்கும் தண்ணீர் இல்லை. கிச்சனில் கேட்டேன் அவர்கள் மொண்டு குடிக்க சொன்னார்கள் என்றான். எனக்கு இல்லை எனது அப்பாவிற்கு என சொல்லி இருக்கிறான். அதற்க்கு அவரை வந்து குடிக்க சொல்லுங்கள் என்றான். 


நான் கிச்சன் சென்று வாட்டர் பாட்டில் வாங்கி குடித்து விட்டு சிறிது நேரம் பசியை ஆற போட்டேன் ஆனால் எனக்கு சராசரி இந்தியனுக்கு இருக்கும் பிரஷர், சுகர் மட்டும் இல்லை இன்னும் இரண்டு வியாதிகள் இருந்தது. அது மனிதர்களிடம் பேசும் போது ஓரு வித பயமும் பதட்டமும் தொற்றிக்கொள்ளும் மற்றொன்று ஓரு மருத்துவ முழு என்னை ஆய்வு செய்து ரொம்ப ரொம்ப அரிதான பைத்தியம் என்றார்கள். அது பைத்தியத்தில் அரிதானது என்றால் மற்றவர்கள் என்னை பார்க்கும் போது நான் நார்மலாக இருப்பதாக தெரிந்தால் அப்போது பைத்தியம் பிடித்து இருக்கிறேன் என்று அர்த்தம் ஆனால் நீங்கள் பார்க்கும் போது நான் பைத்தியம் பிடித்தது போல இருந்தால் அப்போது நான் நார்மலாக இருக்கிறேன் என்று பொருள். 


பசியில் இருக்கும் போது எனக்கு வயிறு கபகப என்று இருக்கும் அதே பைத்தியம் பிடித்து பசியில் இருக்கும் போது கை கால்கள் நடுங்கும் மயக்கம் வருவது போல இருக்கும். உணவு தயார் ஆகிவிட்டது ஆனால் தரப்படவில்லை, மணி 12.30 தாண்டியவுடன் பசி மயக்கத்தை நெருங்கி கொண்டு இருந்தேன் இதை நன்றாக புரிந்து கொண்ட மகன் வாருங்கள் வெளியில் சென்று சாப்பிடுவோம் என்றான். வெளியில் வரும்போது இனிப்பு பீடா தயார் செய்து இருந்தவரிடம் ஒன்று போட்டு கொண்டேன். அதன் பிறகு தான் பசி அதிகரித்து ஓரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் வீடு சென்று உறங்கி விட்டேன். 


எழுந்த பின்பு ஓரு தேநீர் அருந்துவிட்டு ஒவ்வொருவராக போன் செய்து அழைத்து என்ன காரணம் உணவு தயார் ஆன பின்பும் உணவு தரப்படவில்லை என்று கேட்டேன். எனக்கு மந்தபுத்தி எதையும் புரிந்து கொள்ள முடியாது, ரொம்ப late ஆக தான் புரியும். ஒருவரிடம் கேட்டால் சமாதானம் ஆக மாட்டேன் ஆகையால் பல பேரிடம் கேட்டு விளக்கம் தெரிந்து கொண்டேன். முதலிலேயே சாப்பாடு போட்டால் இரண்டாவது தடவை பந்தியில் வந்து சாப்பிடுவார்கள் என்றார்கள். 


ஒருவன் பசியிலோ அல்லது உணவின் மேல் உள்ள ஆசையில் இரண்டு அல்லது மூன்று முறைதான் சாப்பிட்டால் என்ன? ? அப்படி சேமித்து என்ன செய்ய போகிறீர்கள்?  என தெரியவில்லை. எனக்கு தான் பைத்தியம் புரியவில்லை உங்களுக்கு புரிந்ததை சொல்லுங்கள். 

பாரதி - தனி ஓரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த உலகை அழித்திடுவோம்.


என் வீட்டில் ஓரு விருந்து உபசரிப்பு, நெருங்கிய நண்பர் சாப்பிட்டு விட்டு என் மனைவியிடமும் அங்கு இருந்தவர்களிடம் சண்டை செய்து இருக்கிறார். என்ன பிரச்சினை என்று போன் செய்து கேட்டேன். கறி குழம்பு, வறுவல் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் ரசத்தில் உப்பு கம்மியாக இருந்தாக சொன்னான். என்னை ஏன் நீங்கள் சமைக்க சொல்ல வில்லை என்றான் ( மருந்து அடித்து விட்டு வந்து சண்டை செய்கிறான் ). அந்த கலவரத்தின் போது நான் ஊரில் இல்லாதது மகிழ்ச்சியே.


இன்னும் பல பகுதிகளில் சுமார் 15/30நாட்கள் அந்த திருமணம்/ அசுப நிகழ்ச்சி நடக்கும் வீட்டிலே தான் அவர்களின் பங்காளி குடும்பங்கள் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். இதை எங்கள் வீட்டில்  நான் பார்த்து இருக்கிறேன்.


இந்த விருந்து என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. 


திருமணதிற்கு முன் மணமகனின் வீட்டிற்கு பெண் வீட்டார்கள் விருந்துக்கு கலந்து கொள்கிறார்கள். பெண் வீட்டார்கள் பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இரண்டு வீட்டார்களும் ஜாமீன் குடும்பத்தார்கள். இந்த திருமணங்கள் திருவிழா போன்று நடக்கும். பெண் வீட்டார்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு இருப்பார்கள். இந்த விருந்து பல மாதங்கள் நீடிக்கும். பல்வேறு வகையான அறுசுவை உணவுகள் மூன்று வேலையும் பரிமாறப்படும். அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடக்கும். 


நாட்கள் செல்ல செல்ல அவர்களின் கையிருப்பு குறைந்து கொண்டே வந்து கடைசியில் கடன் வாங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. ஓரு ஐயரிடம் ( அந்த பகுதியில் செல்வாக்கான நபர் ) கொஞ்சம் கொஞ்சமாக பத்திரத்தை கொடுத்து விட்டு பணம் வாங்கி விருந்து அளித்துள்ளார். ஜாதகம் பார்த்து தேதி குறித்து விட்டு பெண் வீட்டார்கள் அவர்களின் வீட்டிற்கு சென்றார்கள். 


மணமகன் வீட்டார்கள் ஐயரிடம் சென்று கணக்கு வழக்குகள் பார்க்கப்படுகிறது. சுமார் 800 ஏக்கர் விளைநிலம் ஓரு குறிப்பிட்ட நாளில் ரெஜிஸ்டர் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 


இந்த செய்தி யாரோ ஓருவரின் மூலமாக பெண் வீட்டாருக்கு சென்றுவிட்டது. மணமகன் சில நாட்கள் சென்று பெண் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பரிசு பொருட்களை கொடுத்து விட்டு என்னுடைய கடன் பிரச்சினையால் என்னுடைய நிலங்களை விற்க நேர்ந்து விட்டது. ஆகையால் உங்களுக்கு நிகரான சொத்து மதிப்பில் நான் இல்லை. நான் உங்கள் மகளை நீங்கள் வளர்த்த நிலையில் பார்த்துக்கொள்ள முடியாதது ஆகையால் தயவுகூர்ந்து வேறு யாருக்காவது கொடுங்கள் என்றும் உங்களுடன் பழகிய இந்த நாட்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை நிறைவான திருப்தியும் அளித்தன. அதே நேரம் எங்களால் உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு என்னை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு வந்து விட்டார். 


தன்னுடைய நிலம் முழுவதும் இழந்து விட்ட பின் எவ்வாறு ஓரு மனிதனால் இவ்வளவு மகிழ்ச்சியாக 

இருக்க முடிகிறது. 


விருந்து என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். விருந்து என்ற பேரில் நீங்கள் பாவங்களை செய்து கொண்டு இருக்குறீர்கள். 


இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள். 


மணப்பெண் அந்த மணமகன் தான் வேண்டும் என்று தன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி திருமணம் நன்றாக நடந்து முடிந்தது. மணமகளின் வீட்டார் கொடுக்க முன் வந்த நூறு ஏக்கர் நிலங்களையும் நகைகளையும் பண உதவியையும் மறுத்து ஓரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  இப்படி பட்ட நல்ல குணம் உள்ள மனிதர்களிடம் தான் நட்பு கொண்டு உள்ளேன்.



பஸ்சில் கல் எறிதல்:

பஸ்சில் கல் எறிதல்: 

ஊரில் இருந்து பேருந்து நிலையம் செல்ல சுமார் 2km வயல் வெளியில் ஊடே வரப்பில் தான் செல்ல வேண்டும். செருப்பில் வரப்பில் உள்ள உலை மண் ஒட்டிக்கொண்டு நடக்க கூட முடியாது. ஆகையால் கையில் எடுத்துக்கொண்டு சென்று பேருந்து நிலையம் சென்று வாய்க்காலில் கழுவிக் கொள்வோம். அன்று பரீட்சை ஆகையால் சீக்கிரமே பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம்.  வழக்கம் போல பேருந்து நிலையத்தில் காத்து இருந்தோம். 


பஸ் வந்தது ஆனால் நிற்க வில்லை. எல்லோருமே மாணவர்கள்,  கற்களை எடுத்து பேருந்தின் மேல் வீசினோம். என் தம்பி கண்ணாடிகளை உடைத்து விட்டான். அவன் கோபப்பட மாட்டான், கெட்ட வார்த்தை பேச மாட்டான், அது ஏன் கிரிக்கெட்டில் குறி பார்த்து சரியாக ஸ்டம்ப் க்கு அடிக்க மாட்டான். 


பஸ்சை நிப்பாட்டி எல்லோரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். எங்களுக்குகெல்லாம் மகிழ்ச்சி ஆனால் வெகு நேரம் நீடிக்கவில்லை. பேருந்தை நேராக காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். எங்களை எல்லாம் இறக்கி காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார்கள் பிறகு நாங்கள் எல்லாம் உயர் அதிகாரிக்காக காத்திருந்தோம். 


உயர் அதிகாரி வந்து 500 ரூபாய் அபதாரம் விதித்தார். அந்த அபதாரத்தை கட்டிவிட்டு நீங்கள் எல்லாம் செல்லலாம் என்றார் அவர். நாங்கள் எங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் வாங்கி 500 ரூபாய் அபராதத்தை செலுத்தினோம் பின்பு பள்ளிக்குச் சென்று பரீட்சை எழுதினோம். நடந்த விவரங்களைச் கூறியபின் பரிட்சை எழுத அனுமதித்தார்கள். 


கல் எறிந்து கண்ணாடியாய் உடைத்த என்னுடைய தம்பி அரசு வேலையில் இருக்கிறான். 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான். அவனால் முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்து கொண்டு வருகிறான். 


இப்பொழுது சொல்லுங்கள்  பேருந்தின் கண்ணாடியை உடைத்தது சரியா?தவறா ? அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தில் எல்லா பேருந்துகளும் நின்று தான் செல்கின்றன. 

பேருந்து நிலையத்தின் பெயர்: மதகடி 

காவல் நிலையத்தின் பெயர்: காட்டுமன்னார் கோவில் காவல் நிலையம்

விருந்து -

  விருந்து -  நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக...