பஸ்சில் கல் எறிதல்:
ஊரில் இருந்து பேருந்து நிலையம் செல்ல சுமார் 2km வயல் வெளியில் ஊடே வரப்பில் தான் செல்ல வேண்டும். செருப்பில் வரப்பில் உள்ள உலை மண் ஒட்டிக்கொண்டு நடக்க கூட முடியாது. ஆகையால் கையில் எடுத்துக்கொண்டு சென்று பேருந்து நிலையம் சென்று வாய்க்காலில் கழுவிக் கொள்வோம். அன்று பரீட்சை ஆகையால் சீக்கிரமே பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம். வழக்கம் போல பேருந்து நிலையத்தில் காத்து இருந்தோம்.
பஸ் வந்தது ஆனால் நிற்க வில்லை. எல்லோருமே மாணவர்கள், கற்களை எடுத்து பேருந்தின் மேல் வீசினோம். என் தம்பி கண்ணாடிகளை உடைத்து விட்டான். அவன் கோபப்பட மாட்டான், கெட்ட வார்த்தை பேச மாட்டான், அது ஏன் கிரிக்கெட்டில் குறி பார்த்து சரியாக ஸ்டம்ப் க்கு அடிக்க மாட்டான்.
பஸ்சை நிப்பாட்டி எல்லோரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். எங்களுக்குகெல்லாம் மகிழ்ச்சி ஆனால் வெகு நேரம் நீடிக்கவில்லை. பேருந்தை நேராக காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். எங்களை எல்லாம் இறக்கி காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார்கள் பிறகு நாங்கள் எல்லாம் உயர் அதிகாரிக்காக காத்திருந்தோம்.
உயர் அதிகாரி வந்து 500 ரூபாய் அபதாரம் விதித்தார். அந்த அபதாரத்தை கட்டிவிட்டு நீங்கள் எல்லாம் செல்லலாம் என்றார் அவர். நாங்கள் எங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் வாங்கி 500 ரூபாய் அபராதத்தை செலுத்தினோம் பின்பு பள்ளிக்குச் சென்று பரீட்சை எழுதினோம். நடந்த விவரங்களைச் கூறியபின் பரிட்சை எழுத அனுமதித்தார்கள்.
கல் எறிந்து கண்ணாடியாய் உடைத்த என்னுடைய தம்பி அரசு வேலையில் இருக்கிறான். 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான். அவனால் முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்து கொண்டு வருகிறான்.
இப்பொழுது சொல்லுங்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்தது சரியா?தவறா ? அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தில் எல்லா பேருந்துகளும் நின்று தான் செல்கின்றன.
பேருந்து நிலையத்தின் பெயர்: மதகடி
காவல் நிலையத்தின் பெயர்: காட்டுமன்னார் கோவில் காவல் நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக