புதன், 4 டிசம்பர், 2024

அந்த ஒரு நாள்

 அந்த ஒரு நாள்


தூக்கம் லேசாக கலைகிறது,  நான் கண் விழித்து பார்க்கிறேன், அது எனது 

வீடு, அப்பாடா! நம் வீட்டில்தான் தூங்கி  கொண்டிருந்திருக்கிறோம். ஒரு 

நிம்மதி. நேற்று எப்போது  வீட்டிற்கு வந்தோம், எப்படி படுத்தோம் என்ற 

நினைவு இல்லை. நல்ல போதையில் வீட்டிற்கு வந்து படுத்தது நினைவிற்கு 

வந்தது. என் உறவுக்காரன் வீட்டின் இருந்தான், நல்ல தூக்கமா? என்றான்.


 

உறவுக்காரன்: காலையிலேயே வந்தேன், நீங்கள் நன்றாக தூங்கி 

கொண்டிருந்தீர்கள். நான் தொந்தரவு  செய்ய வில்லை.

 

ஒரே தலைவலியாக இருந்தது. எனக்கு மது வேண்டும் வாங்கி வா, என்றேன்.


உடனே எனக்கு பணம் பற்றிய ஞாபகம் வந்தது, சட்டென்று பதறியெழுந்து 

நேற்று அணிந்திருந்த பேண்டில் இருந்த பர்சைப் தேடினேன். பர்சை 

காணவில்லை. ஆனால்  முன்னால் பாக்கெட்டில் பணம் இருக்கிறது. எனது 

கைப்பையை எடுத்து வேகமாக திறந்து பார்க்கிறேன்,  அதில் தண்ணீர் 

பாட்டில் வைக்கும் பகுதியில் பர்ஸும் பணமும் இருக்கிறது, ஏதும் காணாமல் 

போகவோ அல்லது குறையவோ இல்லை.  அதில் ஒரு Manson House Full பாட்டில் 

மது, அதில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அந்த கொஞ்சமும் நான்தான் 

குடித்தேன். Marlboro Light சிக்ரெட் பாக்கெட், எனது துணிகள் மற்றும் கொஞ்சம் 

பணம் ஒழுங்காக மடிக்கப்படாமல் , கன்னாபின்னாவென்று சுருட்டி இருந்தது. 

எப்படி தனித்தனியாக பணம், நேற்று ஒரு நாள் முழுக்க குடித்து இருக்கிறேன்

கணக்கு வழக்கு இன்றி ஆனால்  ஏதும் தொலையவில்லை. யாரும் திருடி 

எடுத்துக்கொள்ள வில்லை.

 

என் உறவினனிடம், நான் குளித்துவிட்டு வருவதற்குள் மது ஊற்றி, பழங்கள் 

தயார் செய்து வைக்கசொல்லிவிட்டு, பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு 

வந்தேன். ஊற்றி சரியாக மிக்ஸ் பண்ணி வச்சிருந்தான். ஒரு ரவுண்டு 

போட்டேன். நீயும் மதுவை குடி என்றேன். இரண்டு துண்டு திராட்சையை 

வாயில் போட்டு சாப்பிட்டேன், திராட்சை கொட்டையை திப்பியவுடன்

உடனேயே அடுத்த ரவுண்டு என்றேன்.

 

உறவுக்காரன்:ஏன் இவ்வளவு அவசரம்.

தலைவலிக்குது, நேற்று நிறைய மது அறிந்திருந்தேன், எப்படி வந்தேன்னு 

தெரியல என்றேன். இரண்டாவது ரவுண்டு போட்டு கொஞ்சம் நேரம் கழித்து 

எல்லாம் நினைவிற்கு வந்தது. ஒரு பிரச்சனை என்னன்ன எனக்கு நினைவுக்கு 

வந்தா, எல்லாம் நினைவிற்கு வரும், இல்லையேல் ஒன்றுமே வராது

யோசிச்சிகிட்டு இருப்பேன்.


நேற்று நான் கல்பாக்கத்தில் எனது அப்பாவிற்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் 

இருந்தேன். அதற்கு

முதல்நாள் இரவு இரண்டு மணிவரை என் மாப்பிள்ளை ரஜினியுடன் சேர்ந்து 

கடற்கரையில் மது அருந்தி கொண்டு இருந்தோம். எனக்கு இருக்கும் ஒரே 

நண்பன், அவன் தம்பி அலெக்ஸ், அவனிடம் எல்லாம் பகிர்ந்து கொள்ள 

தோணும், நான் அவனிடம் ஒரு நாள் இரவு போன் செய்து என்னை நண்பனாக 

ஏற்றுக் கொள்வாயா?  என்றேன்.

 

அலெக்ஸ் : அது எல்லாம் எனக்கு தெரியாது, கடைசிவரை, நீங்கள் என்னை 

திட்டினாலும், அடித்தாலும், நான் உங்களுடன் தான். எனக்கு என்ன மாமா 

வேண்டும்? நீங்க, அக்கா, ஜோகன் மற்றும் ஹரிணி பாப்பா போதும். நம்ப 

கடைசி காலத்தில் நாம் அவர்களுடன் தான் இருக்கணும்.

 

ரஜினிக்கு ஒரு கெட்டபழக்கம் எங்கையாவது குளக்கரையோ அல்லது 

ஏரிக்கரையோ அல்லது நீர் நிலைகளுக்கு  அருகில் அமர்ந்து மது குடிக்க 

சென்றால், மாமா! ஒரு நிமிடம் இரு, என்று அவன் அணிந்திருந்த கைலி 

அல்லது வேட்டியை விரித்துப்போட்டு இப்ப உட்காருங்கள் என்பான்

வேண்டாம்டா என்றால், யோவ் ! கீழே ஏதாவது கட்டெறும்பு அல்லது பூச்சி 

கிடக்கும் என்பான். அப்பறம் மாமா சாப்பிட்டுட்டு உட்காந்திரு! என்று 

சொல்லி விட்டு தண்ணீரில் இறங்கிடுவான். அந்த குளத்தில் மீன் வளர்பிற்க்கு 

விட்டாலும் சரி விடாவிட்டாலும் சரி, கையாலே தடவிப்பிடித்து கொஞ்சம் மீன் 

பிடித்து வருவான். அதற்குள் அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் 

பையன்களிடம் பணம் கொடுத்து, மிளகாய் பொடி, உப்பு வாங்கி 

வரச்சொல்லி, அவனுங்களுக்கு போண்டா வாங்கிக்கொள்ள காசும் 

கொடுப்பேன். சிறுது நேரத்தில் மீன் சுட்டு ரெடி பண்ணி எடுத்து வருவான்

நான், டேய் மாப்ள, கவனிக்கலடா, உன் பங்குல கொஞ்சமா குடிச்சுட்டேன்னு 

 சொல்லுவேன்.


ரஜினி : ஓத்தா! எனக்கு சரக்கு வரலன்னா பாரு!


நான்:ஒன்னும் பிரச்னை இல்லடா மாப்ள, பைக்கை எடுத்துட்டு போய் 

வாங்கிவா! பணம் தரேன்.

ரஜினி: எனக்கு பைக்கு ஓட்ட தெரிஞ்சா நான் வாங்கிட்டு வர மாட்டேன்னா?

நான்: என்ன! இன்னுமா நீ கத்துக்கல, உன் மகன் பெரியவன் வண்டிய 

ஓட்டுறாண்டா!

 

ரஜினி:  மாமா வண்டி கத்துத்தருக்கிறேன் என்று சொல்லி Rs,100 வாங்கி 

பெட்ரோல் போடுவார், ஆனால் எனக்கு சொல்லி  தராமல் பின்னால்தான் 

உட்கார சொல்லுவார் என்பான். இப்ப அவன் இல்ல, ஒரு நாள் செத்துட்டான், 

நுரையீரல் பிரச்சினை, கொஞ்சம் குடி, நிறைய  புகையிலை, ( Hans ) அது 

போடாதிங்கன்று சொன்னா அவன் கேட்கவில்லை. அரசுதான் எவ்வளவு 

போராடுறது, நாமளும் கொஞ்சம் ஒத்துழைழைக்கணும்.

 

பத்து, பதினாறு நண்டு பிடித்து கொண்டி வந்தோம், இரண்டு மணிக்கு மேல் 

வந்தோம். இதை என் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்க வேண்டும்

காலையில் எழுந்து சத்தம் போட்டு கொண்டிருந்தார். அவர் பைபாஸ் 

ஆப்ரேஷன் முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார், உறவினர்களும் 

வீட்டில் இருந்தனர். என் பணத்தை செலவு செய்கிறாய் என்றார். உன் பணம் 

செலவாகவில்லை, நீ  ஆஸ்பத்திரியிலும், இருந்து வந்ததுமுதல் தம்பின் 

பணமே செலவாகிறது என்றேன். ஒரு லட்சத்தை வரை செலவாகி இருக்கிறது

என்றேன். எப்படி செலவானது, என்றார்.

 

உனக்கு மாத்திரை முதல் வண்டி செலவு, சாப்பிட்டு செலவு, அரை வாடகை 

எடுத்து தங்கியது வரை உன் செலவு இல்லை. சரி விடு! உனக்கு ஒரு ரூபாய் 

செலவு ஆனதா என்றேன். மௌனமாய் இருந்தார். இல்லை தானே! உனக்கு 

என் தேவை முடிந்து விட்டது, நீ தேறிவிட்டாய் நானும் கிளம்புகிறேன் என்றேன். 

எனது துணிகளை எடுத்து வைத்து கொண்டு கிளம்ப தயாராகி 

கொண்டிருந்தேன். என் அம்மா ஓடி வந்து என் பையை பிடுங்கி வைத்து 

கொண்டு அப்பா  ஏதாவது சொன்னா சொல்லிட்டுப்போறாரு, அம்மா 

சொன்னா கேளு!


இப்படியெல்லாம் ஒன்றும் நடக்கல கீழே இறங்கி வந்தேன், கீழ் வீட்டில் பெண் 

தன் பெற்றோர்களுடன் நின்று கொண்டிருந்தாள். ஹாய் என்று கையை 

தூக்கினேன். அவளும் கையை தூக்கி  சிரித்தாள், அதற்கு பிறகு எங்கள் 

வீட்டிற்கு வரவே கூடாது என்று நினைத்து கொண்டு கிளம்பினேன்.

  

கல்பாக்கத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு பஸ்ஸில் போய்  சேர்ந்தேன் ஒரு நல்ல 

மதுக்கடையை தேர்ந்தெடுத்தேன் உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தேன். 

சார்! என்ன வேண்டும்? கட்டிங்கா? குவாட்டரா? மேன்ஷன் ஹவுஸ் புல், பழம் 

சாலட், வாட்டர் பாட்டில், இரண்டு  பாக்கெட் மால்போரோ லைட்ஸ் என்றேன். 

கிங்ஸ் தன் இருக்கு மால்போரோ இல்ல என்றார். எல்லாம் எடுத்து வந்து 

வைத்து விட்டு, சார், பாட்டிலை பேக் பண்ணிவிட்டு, உங்களுக்கு ஒரு பீர் 

கொண்டு வரவா? என்றார். நான் குடிக்கத்தான் வாங்கினேன். அப்படியே 

டேபிளில் வைத்துவிட்டு வெளியில் சென்று இரண்டு பாக்கெட் மால்போரோ 

லைட்ஸ் வாங்கி  வந்தேன். ஒரு ரவுண்டு போட்டேன் பக்கத்துக்கு டேபிளில் 

இருந்தவங்க மிரண்டுட்டாங்க, என்னடா இது ஒரு புல்ல வச்சிக்கிட்டு ஒருத்தன் 

உக்காந்துருக்கான்.


தனியாக குடிக்கிறது போர்தான் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் போது 

ஜாலியாக போகும், அதே சமயத்தில் தனியாக உட்கார்ந்து குடித்தால் ஏதாவது 

சிந்தனைக்குள் போயிட்டே இருப்பன். நேற்று இரவு நானும், ரஜினியும், கடலை 

பார்த்துக்கொண்டு மது அருந்தியது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி, நல்ல குளிர், 

இதமாக இருந்தது. மதுவெல்லாம் ஏற்கனவே வாங்கி அங்கேயே 

மறைத்திருந்தான் ரஜினி. எந்த சமூகத்திற்கும் தொந்தரவு செய்யாமல் 

வீட்டிற்கு சென்றால் வெளியில் கிளம்ப சொல்கிறார், அப்பா. ஆமாம் சரி 

என்றேன். கொஞ்சமாவது இயற்கையை ரசிக்க வேண்டாமா?


நான் இப்போதெல்லாம் யோசிக்கிறேன், நான் பல்வேறு சண்டைகளை 

தேவையில்லாம அவர்களிடம் போட்டுவிட்டோமா என்று, இப்போது 

சொல்லிப்பார்க்கிறேன், கேட்கமால் போனால் நான் என் வழியே 

சொல்கிறேன்

என் தந்தையின் செயல்கள் எனக்கு சில பிடிக்கும் ஆனால்  அவரை மற்றும் 

அவரைப்போல இருக்கும் தந்தைகளை பிடிப்பது இல்லை ஏனென்றால் 

சுயநலம், கெளரவம் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலன் என்ன

என்னதான் அவர்கள் சொல்ல வருகிறார்கள். நான் ஒருமுறை அறுவை 

சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்து பத்து நிமிடம்தான் இறுக்கும் என் 

அப்பாவிடம் பேசச்  சொல்லி போனைத்  தந்தாள் என் அம்மா, அவர் நன்றாக 

இருக்கிறாயா? நான்  கொடுத்த பண்ணதை சீக்கிரம் கொடுத்து வீடு என்று

ஆக மொத்தம் 16  செகண்ட்கள் என்னிடம் பேசினார்.


எனக்கு சில கேள்விகள் இருந்தன.

                          இந்த 16 நொடி முடிந்தவுடன், அவர் மேற்கொண்ட வேலை என்ன? என்ன அவசரம்?

                          Rs,50,000 ஆயிரம் மருத்துவசெலவிற்காக என் அம்மாவிடம் அவர் கொடுத்து அனுப்பியது 

                          அவர் பணம் நெருக்கடியில் இல்லை மாறாக, நல்ல  பொருளாதார நிலையில் இருந்தார்

                    என்னிடம் கேட்தற்கான காரணம்,

என்னை நெருங்ககூடியான சூழ்நிலையில் வைத்திருப்பது, அதிலே அவருக்கு 

சந்தோசம். நான் அப்போதல்லாம் நான் 15 நாட்களுக்கு மட்டுமே மாத்திரைகள் 

வாங்க முடியும். இது என் மனைவிக்கு தெரியுமா? தெரியாதா என்று எனக்கு 

தெரியாது. நன் என் மனைவின் இடத்தில் இருந்தால், கண்டிப்பாக 

தெரிந்திருக்கும், அதுபோல எப்படியாவது மாதம் முழுவதும் மாத்திரைகள் 

வாங்கி இருப்பேன். அப்போது எனது தொழில் நஷ்டம். 

நான் ஒருமுறை நண்பரிடம், கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன், எனக்கு வர 

வேண்டிய பணம் வந்தவுடன் கொடுத்துவிடலாம் என இருந்தேன். ஒருநாள் 

அவர் போனில் அழைத்து வீட்டிற்கு வரச்ச்சொன்னார். தனது இருசக்கர 

வாகனத்திற்கு உதறி பாகங்கள் வாங்கி வரச்சொன்னார். நான் அப்போது 

வேறு ஒரு விஷயமாக வெளியில் செல்கிறேன் ஆகையால் நான் வந்தவுடன் 

இருவரும் செல்வோம் என்றேன்.


இரண்டு தடவை போகணும்! என்றார்.

பரவாயில்ல, நான் தானே இரண்டு தடவை, நீங்கள் ஒரு தடவைதானே! 

என்றேன், எனக்கு கிளைன்ட் மீட்டிங் என்று சென்று விட்டேன். பின்பு ஏழு 

மணிவாக்கில் வந்தேன். அவரின் வீட்டிற்கு சென்று கேட்டான். அவர் வாங்கி 

வந்ததாக சொல்லிவிட்டு, முகத்தை தூக்கி, முருங்கை மரத்தின் மேல் வைத்து 

கொண்டார். நான் பதிலுக்கு காத்திருக்கமால் வீட்டிற்கு வந்தேன். என் 

தம்பிக்கு விஜிக்கு போன் செய்து நடந்தவைகளை சொல்லி பணம் பெற்று 

இந்த கடனை அடைத்தேன், பின்பு ஒரு வாரத்தில் விஜியிடம் திருப்பி 

கொடுத்தேன். அது முதல்,  மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். என் மேல் என் 

உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ வருத்தம் இருக்கலாம், 

ஆனாலும் நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. வேடிக்கை, விழா, 

காதுகுத்து, வீடு குடிபோவது, அதில் ஒரு விஷேசம், தரைத்தளம் ஒரு தடவை 

குடிபோவது, இரண்டாவது தளம் ஒருமுறை குடிபோவது. பாருங்க! நான் என்ன 

பண்றது. மருத்துவ மற்றும் மிக மிக அத்தியாவசிய செலவு போக எதற்கும் 

கடன் வாங்குவதில்லை, கடன் உங்களின் பலத்தை குறைக்கும். கடன் 

உங்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கும்,  தற்கொலைக்கு தூண்டும், 

தவறான வழிகளுக்கு அழைத்து செல்லும், உங்கள் மூளையை செயல் 

படவிடாது. எது இருக்கிறோதோ அதற்குள் வாழ பழகிக் கொண்டேன் .

சிலர் பெற்றோர்களிடத்தில் வைத்திருக்கும் மரியாதை, அளவிற்கடந்த 

பாசமும் என்ன ஆச்சரித்தில் ஆழ்த்தும்.எவ்வளவோ சரியான செயல்களை 

அவர்கள் செய்திருந்தாலும் அவர்களின் செய்ல்பாடுகள் மிகவும் 

வருத்தத்தையே அளித்தன. அவற்களின் மன்னிக்கும் பக்குவம் என்னிடம் 

உள்ளது. ஆனால் அவர்களிடம் பேச விருப்பம் இல்லை. இது பல முறை பல 

சந்தர்ப்பங்களில்  நடந்து கொண்ட விதங்களின் அடிப்படையிலே 

எடுக்கப்பட்டது .

 

இரண்டாவது ரவுண்டு போட்டேன், அப்போல்லா ஹாஸ்பிட்லில் நடந்த ஒரு 

சம்பவம் ஒன்று நினைவிற்க்கு வந்தது. அவரின் ஒரு ரிப்போர்ட் வேண்டும் 

என்றார் டாக்டர். அந்த ரிப்போர்ட் என் தம்பியின் வீட்டில், சென்னையில் 

கிரீம்ஸ் ரோடு, அப்போலோ ஹாஸ்பிட்லில் இருந்தது கோடம்பாக்கத்தில் 

இருக்கும் தம்பியின் வீட்டிற்கு ஓடியே சென்று அந்த ரிப்போர்ட்டின் தகவலை 

சொன்னேன். என்னிடம் பணம் இருந்தது, ஆனல் ஆட்டோவிற்காக 

காத்திருக்கும் யோசனை இல்லை. உங்களின் தேவை மற்றவர்களுக்கு 

தேவையில்லை என்றால் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்.

 

பையினுள் பாட்டிலை வைத்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.   

படிக்கட்டில் ஒருவர் பிச்சையெடுத்து கொண்டிருந்தார், யாராலோ 

நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் அருகில் அமர்ந்தேன். லைட்டர்  

இருக்கிறதா? என்றேன். அவர் பாக்கெட்டில் கையை விட்டுகொண்டே 

தீப்பெட்டிதான் இருக்கு, என்று முறைத்தார், நான், கையை நீட்டிக்கொண்டே 

முரட்டுத்தனமாக முறைத்தேன். பற்றவைத்துவிட்டு இந்தா நைனா என்று 

தீப்பெட்டியும் சிகரெட் பாக்கெட்டையும் கொடுத்தேன். அவர் தீப்பெட்டியை 

மற்றும் வாங்கிக்கொண்டு சிகரெட் வேண்டாம் என்றார். இடது கையால் 

தட்டை ஒரு குலுக்கி அம்மா!  பிச்சை என்றார்  பாரின் சிகிரெட் வேண்டாமாம் 

50காசு வேண்டுமாம். இடது கையை தலையின் கீழ் வைத்துவிட்டு கால் மேல் 

கால் போட்டு வலது கையில் சிகிரெட் புகைத்துக்கொண்டு அவரின் 

படிக்கட்டுகளில் சாய்ந்து படுத்துக்கொண்டேன். நான் சொன்ன நீ கேட்கணும், 

நீ சொன்ன நான் கேட்பேன் என்றேன். அவர் ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தார். 

அவர் உட்கார்ந்துட்டு சிகரெட் பிடித்தார் நான் கால் மேல் போட்டுக்கிட்டு, 

பையை தலைக்கு வைத்துக்கொண்டு ஒரு கையில் பாரின் சிகரெட் 

இன்னொரு கையில் பிச்சை தட்டு. எனக்கு தட்டை குலுக்கி கேட்க பிடிக்கல 

ஆதலால் தட்டை தூக்கி காட்டினேன். அப்பப்ப தட்டை இறக்கி பார்ப்பேன், 

அதிலிருந்து எவனாவது எடுத்திருவான். இது எல்லாமே வெயிலில் நடந்து 

கொண்டிருக்கிறது.அவர் இடதுபக்கம் வருபர்களிடம் தட்டை நீட்டுவார், அந்த 

தட்டை வாங்கி நான் வலது பக்கம் வருவர்க்களிடம் தட்டை காட்டுவேன்,  

எனக்காவது சிலர் காசு போட்டாங்க, ஆனா அவருக்கு ஒருத்தன் கூட போடல. 

யோவ் பாரின் சிகிரெட் பிடிச்சிகிட்டு பிச்சை எடுத்தா எவன்யா காசு 

போடுவான், என்றார் சக தொழிலாளி. அவரை நோக்கி, நைனா! சிகரெட் 

பிடிப்பியா ? என்றேன் அவரின் பதிலுக்கு காத்திராமல், சிகரெட் பாக்கெட் 

அவரிடம் தூக்கிப் போட்டேன்.

 

சரி சார், கிளம்புங்க, தொழில் பாதிக்கும், பார்க்க படிச்சவங்க மாதிரி 

இருக்கீங்க! கிளம்புங்க என்றார்.


என் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்து, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ 

அவ்வளவு எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் நீங்க என்னுடன் தான் இருக்க 

வேண்டும் என்றேன் அவரால பேசி சமாளிக்க முடியல, சரி என்று 

ஓத்துக்கொண்டார்.

ஒரு அஞ்சு நிமிடம் இருப்பா, வரேன்னு தட்டில இருந்த சில்லரை காசு 

எல்லாத்தையும் எடுத்தார். நான் அவரோட பையை எடுத்து பக்கத்துல 

வைத்துக்கொண்டேன், சிறுது நேரத்தில் திரும்பி வந்தார். பழையபடி தட்டில் 

காசு இருந்தது, ஏது சார் இது? என்றார். நான் தான் தட்டை காட்டி வாங்கினேன் 

என்றேன். தேவையா சார் உங்களுக்கு இது என்று தட்டை வாங்க வந்தார்.

இருங்க தட்டில் இருக்கும் காசு என்னுடையது என்றேன், தட்டில் இருந்து 

சாய்த்து காசுகளை கையில் கொட்டி, எனது கைப்பையில் தண்ணீர் பாட்டில் 

சொருகும் பகுதியில் வைத்துக்கொண்டேன்

காலி தட்டை அவரிடம் நீட்டி இது உங்களுடையது என்றேன். வேண்டுமானால் 

இதையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். வாங்க! எங்காவது 

நிழலில் உட்காரலாம் என்றார். நைனா! இந்த பஸ் ஸ்டாண்ட் இருக்கிற மொத்த நண்பர்களையும் வரச்சொல்லுங்க,

அஞ்சு நிமிடம் டைம் என்றேன். ஒருத்தரிடம் சொல்லி அழைத்து 

வரச்சொன்னார். நைனா! எனது பையை காட்டி, இந்த பையை தூக்கி பாருங்க! 

Weight ஆ இருக்கா ! அல்லது உங்க பை Weight ஆ  இருக்க என்றேன். உங்க பை 

தான் Weight ஆ இருக்கு என்றார். அப்ப உங்க பையை நான் 

தூக்கிக்கொள்கிறேன். நீங்க என் பையை தூக்கிக்கொள்ளுங்கள் என்றேன். 

நான், அந்த பிச்சைக்காரர் வைத்து இருக்கும் பையை மாட்டிக்கொண்டேன், 

அவரிடம் என் பையை தூக்கிக்கொள்ளுங்கள் என்றேன். எனது பையில் தான் 

எனது பர்ஸும் இருக்கிறது . நாம் எல்லோரும் மதுபான கடைக்கு போவோம் 

என்றேன். என் பையை மாட்டியிருப்பவர் நீங்கள் முன்னாடி போங்கள் நான் 

வருகிறேன் என்றார். ஒரு wine shop-க்கு நுழைந்தோம்,  Wine Shop Owner என்னடா 

பிச்சைக்காரனெல்லாம் மொத்தமாக வாரீங்கள் என்றார்.

 

ஏன்? நாங்கள் ஒன்றாக வரக்கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா? என்றேன். 

அண்ணே கடைக்கு வர கஸ்டமார் கிட்ட ரெஸ்பக்ட் கொடுங்க என்றேன்.

கடைக்காரர்: சும்மா ஜாலியா சொல்லிட்டேன், கோச்சிக்காதப்பா  என்றார்.

நான்: சரி விடுங்கண்னே! நாங்களும் மனுஷன்தானே? என்றேன். சாப்பிடலாமா? என்றேன்.

கடைக்காரர்: தம்பி என்ன இப்படி கேட்டுடீங்க!  தாராளமாக! போய் சாருக்கு 

டேபிளை சுத்தம் செய் என்றார்.

கடையில் வேலைபார்ப்பவர்: சார்! என்ன சார்! வேணும் என்றார், கடையில் 

வேலைபார்ப்பவர். உங்களுக்கு என்ன வேணும், என்ன சாப்பிடுறிங்க என்றார்.

எங்க டீம்ல ஒருத்தர்: சார்! எங்களுக்கு 40ரூபாய் குவார்ட்டர், உங்களுக்கு நல்ல 

சரக்கா வாங்கிக்கோங்க என்றார்.

நான்: சரக்கு மாத்தி அடிக்க வேண்டாம்னு, மேன்ஷன் ஹவுஸ் Order செய்தேன். 

காசு எங்க, பர்ஸ் எடுக்க நினைக்கும் போது தான் பர்ஸ் பையில் இருப்பதும், 

பை நைனாவிடம் இருப்பதும் நினைவிற்கு வந்தது. அவரைக் காணவில்லை, 

ஆக மோசம் போய்விட்டோம், பையை தூக்கிட்டு போய்ட்டான். என்னிடம் என் 

இரண்டு பாக்கெட்டிலும் பணம் இருந்தது.ஆனல் அவர் பையோடு 

போய்ட்டாரே, நம்மல ஏமாத்திட்டார்னு வருத்தமாகிட்டது. சரி ! 

குடிப்போமுன்னு பணம் கொடுத்து வாங்கி வரச்சொல்லி, தேவையான தம்ளர் 

எல்லாம் வந்தது, நைனா வந்துட்டார். பையை பின்னாடி மாட்டிக்கொண்டு, 

காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி, நைனா ! எங்க போயிருந்திங்க! என்றேன் 

கொய்யாப்பழம் நீட்டினார். பையை டேபிள் மேல் வைத்துக்கொண்டு 

உட்காந்தார், நங்கள் ஒரு டேபிளுக்கு நான்கு பேர் என்று உட்கார்ந்தோம். மீதி 

எங்க டீம் எல்லாம் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டிருந்தார்கள்.

 

பாருக்கு உள்ளே ஒரு நான்கு பேர் வந்தாங்க, எங்களை பார்த்ததும் வெளியே 

போகப் பார்த்தார்கள். நான், அவர்களை அண்ணே! நாங்கள்  கொஞ்சம் இடம் 

எடுத்துக்கொள்கிறோம். மீதி இடம் நீங்க எடுத்துங்கோங்க! இங்க தான் 

நிறைய இடம் இருக்கே! என்றேன். பார் ஓனரைக்கூப்பிட்டு, அண்ணனுக்கு 

என்ன வேணும்னு கேட்டு சீக்கிரம் கொடுங்க! என்றேன். அவருக்கு சந்தோசம், 

வெளில போன கஷ்டமர  உள்ள கொண்டுட்டு வந்ததில. நாம எப்பவுமே 

இருக்கறத பகிர்ந்துக்கறதுல ஒரு பிரச்னை இல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருந்து -

  விருந்து -  நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக...