செவ்வாய், 3 டிசம்பர், 2024

மகளுக்காக

மகளுக்காக

என் பெயர் சரஸ்வதி, அப்பா பேரு குரு. டீச்சரா இருக்காரு. நான் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு என் ரொம்ப நாள் ஆசையான நர்சுக்கு படிக்கலாம்னு இருக்கேன். சின்ன வயசுல ஒரு நாள் உடம்பு சரியில்லன்னு டாக்டர் கிட்ட அப்பா கூட்டிட்டு போன போது, ஊசி போட சொன்னாங்க. ஒரு நர்சுதான் ஊசி போட்டாங்க.  என்கிட்ட அன்பா, அழகா பேசிகிட்டு இருந்தாங்க.அவங்க ஆடை நல்ல வெள்ளையா அழகா இருந்தது. அந்த டிரஸ் மேல எனக்கு ஒரு ஆசை. அதனால அந்த வேலை எனக்கு பிடிக்கும். அதனாலேயே அந்த வேலைக்கு நான் படிக்கணும்னு ஆசை.

 

நான் நிறைய காலேஜ்க்கு  அப்ளை பண்ணி இருந்தேன். அட்மிஷன் கார்டு வரும்னு காத்துக் கொண்டிருக்கிறேன். தினமும் கனவுல நர்ஸ் வேலை பார்ப்பது போலவே வரும். நோயாளிகளை கவனித்து கொள்வது,  அவர்களுக்கு ஊசி போடுவது,  அவர்களை துடைத்து விடுவது என்று  அப்படியே போயிட்டு இருக்கும். 

 

நிறைய பேர் என்னுடைய மார்க் பார்த்துட்டு எனக்கு சீட் கிடைக்கும் என்று சொன்னார்கள் கடைசில எனக்கு எந்த காலேஜ்லையும் சீட் கிடைக்கல.

 

ஒரு நாள் சாயந்திரம், என் அப்பா நல்ல டிரஸ் எடுத்து போட்டுக்க, உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றார். எனக்கு ஒன்னும் புரியல அதுக்குள்ள கல்யாணம் பண்ணனுமான்னு.

 

அதுக்குள்ள அவங்களே வந்துட்டாங்க. நான் அவரைப் பார்த்தேன், அவர் அழகா இருந்தார். என்னமோ வெட்கமா இருந்தது. அவரும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போனாங்க. அவங்க வீட்ல, அவரு ஒரே பையன், அதனால செல்லமாம். நல்ல குடும்பம்னு சொல்றாங்க அதனால அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சுக்கலாம் என்று சொல்லிட்டேன் என்று அப்பா சொன்னார். நான் எப்பவும் அப்பாவின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசியதில்லை.

 

திருமணம் முடிந்தது. தனி தனி குடித்தனம்.

 

அவருக்கு சினிமா மற்றும் பொழுதுபோக்கில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர் எந்த வேலையும் பார்த்ததும் இல்லை அவர் அப்பா வீட்டில் இருந்து பணம் வாங்கி வருவார். அதைக் கொண்டு சினிமாவிற்கும், சர்க்கஸ், இசை நிகழ்ச்சி போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டு போவார். சிறு தொகை வீட்டிற்கு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டோம்.

 

பெண் குழந்தை பெண் குழந்தை பிறந்தது பெயர் ஷர்மிளா

 

மகள் ஷர்மிளா பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறாள். குடும்ப செலவு அதிகமாகிக் கொண்டிருந்தது. கணவரிடம் பணத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அவரும் சத்தம் போட்டு பேசும் பழக்கமோ அல்லது இழுத்து போட்டு அடிக்கும் பழக்கமோ இல்லாதவர். அதனால் மனதில் இருப்பவைகளை கொட்டி தீர்த்தேன். குடும்பத்திற்கு மளிகை சாமான்கள், ஷர்மிளாவின் ஸ்கூல் பீஸ் மற்றும் வேன் பீஸ் ஆகிய விவரங்களை சொன்னேன். அவர் கேட்டுக் கொண்டு, அவரின் அப்பாவிடம் கேட்கிறேன் என்றார். அவ்வப்போது என் அப்பாவும்  பணம் கொடுத்து பணம் கொடுத்து உதவி வந்தார்.

 

அவர் அப்பாவின் வியாபாரம் நஷ்டமாகிவிட்டது, ஆகையால் இனி ஏதும் பெரியதாக பண உதவி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

 

நானும் தெரிந்தவர்கள் மூலம் வேலை தேடி வந்தேன். அபி அக்காவின் மூலம் ஒரு வேலைக்கு சென்றேன். அது ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் மெக்கானிக்கல் கம்பெனி.

உங்களுக்கு அக்கவுண்ட்ஸ் தெரியுமா ?

தெரியாது சார்

சரி பயோடேட்டா கொடுங்க

அக்கா வந்து பார்க்க சொன்னாங்க அப்படியே நான் வந்துட்டேன். என்னுடன் பயோடேட்டா இல்லை.

வேலைக்கு இன்டர்வியூ வரும்போது பயோடேட்டா எடுத்து வர வேண்டும்.

சரி, Tally தெரியுமா?

தெரியாது சார்.

சரி டைப்ரைட்டிங் தெரியுமா ?

தெரியாது சார்

நான் அக்கவுண்ட்ஸ்க்கு தான் வேலைக்கு கேட்டேன், நான் வேறு ஏதாவது வேலை இருந்தா சொல்லி சொல்லிவிடுகிறேன்.

சரி சார் என்றேன்.

 

நேராக பிரவுசிங் சென்டர் சென்று பயோடேட்டா டைப் செய்து வாங்கிக் கொண்டேன். இனி எனக்கு சீக்கிரம் வேலை கிடைத்து விடும்

 

நேராக என் அப்பா வீட்டிற்கு சென்றேன். என்ன என்று விசாரித்தார். இன்டர்வியூ சென்று வந்த விவரங்களையும், என்னிடம் அக்கவுண்ட்ஸ், Tally, டைப்பிங் எல்லாம் தெரியுமா என்று கேட்டார்கள் என்று சொன்னேன். ஏம்பா நீங்க என்னை படிக்க வைக்கவில்லை ? இன்னைக்கு இன்டர்வியூக்கு சென்றேன் எல்லாமே தெரியாது என்று சொல்லிவிட்டேன். அப்பா மௌனமாக இருந்தார்.

 

பிறகு உள்ளே சென்று அம்மாவிடம் என் வீட்டுக்காரர் தான் எந்த ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருக்காரு, நானாவது ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிக்கலாம்னு பார்த்தா, அங்க இந்த கேள்வி எல்லாம் கேக்குறாங்க. ஏம்மா நீயாவது அப்பா கிட்ட சொல்லி படிக்க வச்சி இருக்க கூடாதா? நீயும் சாப்பிட்டு விட்டு அந்த ஆளு கூட குப்பை கொட்டிட்டு இருக்க, இப்ப பாரு நான் தான் கஷ்டப்படுறேன்.

 

சரசம்மா, அம்மாவை அப்படி பேசாத. நானும் எவ்வளவோ உங்க அப்பா கிட்ட படிக்க வைக்க சொல்லிட்டேன். ஆனா அவன் தான் படிக்க வைக்க மாட்டேன்னுட்டான். படிக்கப் போற இடத்துல நீ யார் கூடயாவது ஓடிப் போயிடுவ, டைப்பிங் போற இடத்தில முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஆளுகளுடன் சேர்ந்து பழக்கம் உண்டாகிட்டா என்ன பண்றது, அப்படின்னு தான் படிக்க வைக்கல. அப்புறம் இந்த நாள்ல யாரு பொம்பள பிள்ளைகள் எல்லாம் படிக்க வைக்கிறார்கள். அதனால் வேண்டாம் என்றார். நானும் உங்க அப்பா மீறி ஒன்னும் சொல்ல முடியாம அப்படியே இருந்துட்டேன். நான் அழுதுட்டு அப்பாவிடம் சொல்லாமல் வந்து விட்டேன்.

 

பயோடேட்டா நிறைய நகல்கள் எடுத்து தெரிந்த அனைவருக்கும் கொடுத்தேன். வேலை தேடி கால் செருப்பு தேய்ந்து கொண்டிருக்கிறது.

 

ஒரு டயர் கம்பெனியில் செக்யூரிட்டி வேலைக்கு இன்டர்வியூக்கு போனேன். இந்த வேலைக்கு கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு வரை போதும். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்தாயிற்று. ஒரே ஒரு பிராக்டிகல் டெஸ்ட் மீதி இருக்கு என்றார்கள். என்னை கூட்டி சென்று 45 கிலோ எடையுள்ள ஒரு பொருளை தூக்க சொன்னார்கள். அப்போது எனக்கு ரெண்டு மாதம் தள்ளிப் போயிருந்தது பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிட்டால் பயமாக இருந்தது. சரி என்று தூக்க தொடங்கினேன். என்னால் முடியவில்லை வயிறு வலித்தது. இது நாள் வரை இவ்வளவு  தூக்கி பழக்கப்பட்டதும் இல்லை. ஏன் சார் இந்த டெஸ்ட் என்றேன். ஏதாவது எமர்ஜென்சி சமயத்தில் கனமான பொருள் இருந்தால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஓடத்தான் என்றார்.

சார் நான் செக்யூரிட்டி வேலை பார்க்க போறேன், வெளியில நின்னு தான் பாக்க போறேன். அப்படியே வெளியிலேயே ஓடிடுவேன் சார்.

எனக்கு புரியுதும்மா, இது MNC கம்பெனி, கம்பெனி பாலிசி அப்படிமா!

சார் MNC கம்பெனி என்றால் என்ன சார்? கனமான பொருள் எதுக்கு சார் கொண்டு வந்து வழியில் வைக்கணும்?  அதை முதல்ல வைக்கிறப்பவே எடுத்து ஓரமா வச்சிருக்கலாமே சார்.

இல்லம்மா, எனக்கு புரியுதும்மா. நீ வேற ஏதாவது வேலை இருந்தா பாத்துக்கோ.

சரி சார், நன்றி சார்.

 

இன்டர்வியூ முடிந்து நேராக என் பக்கத்து வீட்டு அபி அக்கா வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்கு சென்று வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்துவிட்டு அபி அக்காவுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சிறிது நேரத்தில் இன்னொரு ஆட்டோ, அதில் என் மகளை அவள் பள்ளியில் இருந்து யாரோ ஒருவர் அழைத்து வந்திருந்தார். உங்கள் மகள் வயதுக்கு வந்திருக்கிறாள் என்று சொல்லிவிட்டு சென்றார். எப்படியோ அங்கும் எங்கும் கடன் வாங்கி நல்லபடியாக எல்லாம் நடந்து முடிந்தது.

 

அபி அக்கா, கலெக்டரிடம் சென்று உன் சூழ்நிலையை சொல்லி ஒரு வேலை கேட்டு மனு கொடுத்து பாரேன் என்றாள்.

காலையில் கலெக்டர் ஆபீஸில் மனுவுடன் சென்று எங்கு செல்ல வேண்டும் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு சீல் வைக்கும் இடத்தில் வரிசையில் நின்றேன்.

எனக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மனுவில் கையெழுத்து போட வேண்டுமா என்று கேட்டார்.

ஆமாம்

எந்த கலரில் போட வேண்டும் கருப்பா ? அல்லது நீல கலரா ?

பச்சை கலரில்

உங்களிடம் பேனா இருக்கிறதா ?

நான் வெளியில் வாங்கி போட்டேன் என்று சொல்லிவிட்டு, இந்தாங்க இந்த பேனாவில் போடுங்க என்றேன். மனுவில் நீங்கள் கருப்பு நிறத்திலோ அல்லது நீல நிறத்திலோ கையெழுத்து போடலாம் என்றேன்.

இவரையும் யாராவது படிக்க வைத்திருக்காமல் இருக்க வேண்டும்.

எனக்கு பின் ஒரு அக்கா நல்ல கருப்பு நிறம். அவர், என்னங்க க்யூ நகர மாட்டேங்குது என்றார்.

எனது இடப்புறம் கையெழுத்து சந்தேகம் கேட்ட நபரின் முன்னாள் ஒரு நபர் மற்றும் அவரது மனைவி. மனைவி ஒரு திருநங்கை. அவர் மனைவி யை அறிமுகப்படுத்தி வைக்க அவசியமில்லை. அவராகவே பேச்சு கொடுத்தார். என்ன விஷயம் என்று கேட்டார். எல்லாவற்றையும் சொன்னேன். பிறகு நாங்களும் அதே விஷயமாக தான் வந்திருக்கிறோம், நாங்கள் ஏதாவது தள்ளுவண்டி கடை வைக்க லோன் கேட்டு வந்திருக்கிறோம் என்று சொன்னார்.

திருநங்கை:  எங்கு வண்டியை நிப்பாட்டினீர்கள்.

அவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அந்த இடத்தில் என்றார்

திருநங்கை:  இப்போது பாருங்கள் அங்கு நிறைய வண்டி (இருசக்கர வாகனங்கள்) வந்துவிட்டது வண்டி யாராவது திருடி விட்டு போயிடப் போறாங்க.

கணவர்: சும்மா இரு! நீ வேற வண்டி வண்டின்னு சொன்னா வண்டி வச்சிருக்கேன்னு உங்களுக்கு லோன் இல்லன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க.

திருநங்கை. வண்டியே ஓசி வண்டி அது திருடு போனா அவ்வளவுதான் உன்கிட்ட பணமும் இல்லை நான் வண்டிக்காரரிடம் இவர் விற்று விட்டார் என்று சொல்லி விடுவேன். அங்கு இருந்த காவல் அதிகாரியை காட்டி மாட்டி விட்டு விடுவேன்.

இது போன்ற தருணங்களில் நானும் சேர்ந்து கொள்வேன்.

சரஸ்வதி:  அக்கா, உங்கள் தோடு நன்றாக இருக்கு

பின்னாடி நின்று கொண்டிருந்த அக்கா, நீங்க வேற அவங்களுக்கு எடுத்து கொடுக்குறீங்களா என்று சிரித்தா ள். மிக மிக அழகாக இருக்கிறது உங்கள் சிரிப்பு என்றேன். அவள் மீண்டும் சிரித்தாள்.

 

திருநங்கை. என் தோடு இவர் கேட்கிறார், போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன் என்றார் சிரிச்சுக்கிட்டே. வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்துகிறார் என்று கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன். உன்ன உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டு வாங்க என்று தன் கணவரிடம் கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

போலீஸ்காரர் திரும்பிப் பார்த்தார்.

திருநங்கை. சார், என்னை வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துகிறார். நீங்க தான் அவரை உள்ள தள்ளி முட்டி முட்டி தட்டணும்

போலீஸ்காரர். சிரித்தார், ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் குடும்மா நான் பார்த்துக் கொள்கிறேன்.

அவரின் மனுவை படித்தேன். நான் திருநங்கை என்பதால் எங்கும் எனக்கு வேலை கிடைப்பதில்லை என்று தள்ளுவண்டி கடை வைக்க லோன் கேட்டு விண்ணப்பிக்க வந்திருக்கிறார்கள்.

கணவர்:  இவளாள் தான் என் அப்பா, அம்மா சந்தோஷமாக இருக்கிறார்கள்.

திருநங்கை:  என்ன இவள? சார், என்ன மரியாதை குறைவா கூப்பிடுகிறார். இரு கலெக்டர் இடம் சொல்லுகிறேன். நீ என்னை மரியாதை குறைவாக கூப்பிடுகிறாய் என்று

கணவர்: சரிங்க மேடம், இனிமேல் உங்களை நான் மேடம் என்றே கூப்பிடுறேன்.

என்னதான் கஷ்டம் இருந்தாலும் சில நபர்களிடம் மட்டும் நகைச்சுவை உணர்வு அதிகமா இருக்கும். சில சமயங்களில் நான் அடிக்கும் ஜோக்குகள் மற்றவர்களுக்கு புரிவதில்லை.

என்னை உள்ளே அழைக்கிறார்கள்

கலெக்டர் அவர்களிடம் மனு கொடுத்தேன். ஆவண செய்வதாக சொன்னார்.

20 நாட்களில் ஒரு கடிதம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, அதாவது என் மனுவை ஆராய்ந்து கடிதம் எழுதியதாகவும், முதன்மை செய்தித்தாள்களைப் படித்து அதில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை பார்த்து விண்ணப்பிக்க அறிவுரை செய்து அனுப்பி இருந்தார்கள்.

வீட்டுக்கு பக்கத்துல இருக்க மளிகை கடைக்காரர் ஒரு எம்பிளாய்மெண்ட் ஏஜென்சி அட்ரஸ் கொடுத்தார். அங்கு தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன். அலுவலகம் வந்தடைந்தேன். ரிசப்ஷனில் என் மகள் வயது ஒரு பெண் ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

வணக்கம்மா! வேலை தேடி வந்து இருக்கேன்.

வணக்கம். என் பெயர் மலர். உங்க பயோடேட்டா குடுங்க, என்ன படிச்சு இருக்கீங்க? எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்?

நான் 12 ஆம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். வேலை பார்த்து எக்ஸ்பீரியன்ஸ் இல்லம்மா.

என் பயோடேட்டாவில் இருப்பதை எல்லாம் விண்ணப்பல் பூர்த்தி செய்து கொண்டு அவ்வப்போது என்னிடம் தேவையான விஷயங்களை கேட்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டிருந்தாள்.

SKILLS சொல்லுங்க?

அப்படின்னா என்னம்மா ?

கம்ப்யூட்டர், இன்டர்நெட் பிரவுசிங், டைப்பிங், ப்ரோக்ராமிங், AUTOCAD, MS Office இந்த மாதிரி டெக்னிக்கல் ஸ்கில்ஸ்.

எனக்கு ஒன்னும் தெரியாதும்மா.

உங்களுக்கு என்ன வேலை தான் தெரியும்.

நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்.

மலர்: அக்கா, எந்த வேலையும் தெரியாதவர்கள் தான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்னு சொல்லுவாங்க.

நான் கண்டிப்பா உங்களுக்கு ஏதாவது வேலை தயார் செய்து தருகிறேன். மளிகை கடைக்காரர் உங்களை பத்தி சொன்னார். நீங்கள் கவலைப்படாம இருங்க. நான் எப்படியாவது நான் உங்களுக்கு ஒரு வேலை தயார் செய்து தருவேன்.

நீங்க என்னமா படிச்சு இருக்கீங்க

மலர்: நான் பத்தாம் வகுப்பு, நீ என்னம்மா பத்தாம் வகுப்பு படிச்சிட்டு 12ஆம் வகுப்பு படிச்ச உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்காதீங்க. இதுதான் தொழிற்கல்வி என்பது நான் பத்தாம் வகுப்பு படித்தவுடன், இந்த வேலைக்கான தொழிற்கல்வி மூலம் படித்து, ட்ரைனிங் முடித்துவிட்டு இந்த வேலையில் சேர்ந்தேன்.

நமக்குத் தெரியாதது எவ்ளோ இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்குமா உன்ன மாதிரி சின்ன பிள்ளைங்க இவ்வளவு அறிவா பேசுறப்ப.

மலர்: 100 ரூபாய் ரெஜிஸ்ட்ரேஷன், 1500 ரூபாய் சர்வீஸ் சார்ஜஸ்.

அம்மா, நான் 600 ரூபாய் தான் வைத்திருக்கிறேன். நூறு ரூபாய் ரெஜிஸ்ட்ரேஷனுக்கும், 500 ரூபாய் பீசுக்கு வச்சுக்கோ மீதி பணம் வேலை கிடைத்தவுடன் கொடுத்து விடுவேன்.

 

மலர்: அக்கா, ஓனர் திட்டுவாரு

புரிஞ்சுக்கம்மா, இல்லன்னா மாதம் 500 ரூபாய் வீதம் 2 மாதத்தில் கொடுத்து விடுகிறேன். பார்த்து ஒரு நல்ல வேலையா ரெடி பண்ணி குடுங்கம்மா. நான் உன்ன தான் நம்பிகிட்டு இருக்கேன்.

 

வீட்டுக்கு செல்வதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. அதற்குள் ஷர்மிளா பள்ளியில் இருந்து வந்து விட்டாள். அழுது கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஏன்? என்ன ஆச்சு அழுது கொண்டிருக்கிறாய் ?

ஷர்மிளா: நாப்கின் வாங்கி வரச் சொல்லி அப்பாவிடம் சொன்னேன். அவர்  உன்னிடம் கேட்க சொன்னார். எனக்கு ஸ்கூல்ல எவ்வளவு அசிங்கமா இருந்தது தெரியுமா? நாப்கின் வாங்க கூட காசு சேர்த்து வைக்காமல் நீ என்ன குடும்பம் நடத்துற ?

எவ்வளவு நாளுக்கு இப்படியே இருக்க போறீங்க ? என்ன வாழ்க்கைமா இது ? உனக்கு சரின்னு படுதாமா இது ? நான் எங்கேயாவது பிறந்து இருக்கலாம். போதுமா! போதும் இனி ஸ்கூலுக்கு நான் போகல. என்னை எங்கேயாவது வேலைக்கு சேர்த்து விடு. நான் படிச்சு பெரிய ஆளா வரணும்னு நான் கண்டேன் பாரு கனவு, அதுவும் உங்களை வைத்துக்கொண்டு.

சரஸ்வதி: நான் ஆறுதல் சொல்லவில்லை. நான் வேறு இருந்த பணத்தை எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி யிடம் கொடுத்து விட்டேன். கடைக்கு சென்று கடன் சொல்லி ஒரு பாக்கெட் வாங்கி வந்து அழுது கொண்டிருந்தவளிடம் கொடுத்து குளித்துவிட்டு வா! நான் வர காபி போட்டு தருகிறேன் என்றேன். குளித்துவிட்டு காபி குடித்தாள் அவள் அருகில் சென்று இடது கை பிடித்துக் கொண்டு, உன் கோபம் சரிதான். நான் சொல்ற விஷயத்தை ரெண்டு நிமிஷம் பேசாம அம்மா சொல்றத கேளு. அவசரப்பட்டு ஸ்கூலுக்கு போறது நிறுத்திடாதே! அப்புறம் நான் படுற கஷ்டமெல்லாம் நீ படனும் . என் கனவை தொலைச்ச மாதிரி, நீ உன் கனவை தொலைச்சுடாத. இதுவரைக்கும் நடந்தது நடந்தது. என்ன மன்னிச்சிடு, நான் எப்படியாவது உன்னை படிக்க வைக்கிறேன். ஒன்னும் கேட்காம உன் டிரஸ், புக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு கிளம்பு. நாம உன் தாத்தா வீட்டுக்கு போறோம்.

 

ஷர்மிளா: அப்பா ?

சரஸ்வதி: அவர் வாழ்க்கை பற்றி அவர் தான் யோசிக்கணும். நான் உன்னைப்பற்றி மட்டும்தான் யோசிக்க முடியும்.

நாங்கள் இருவரும் அவரிடம் சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் என் அப்பாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

 

காலையில் எழுந்து அவளுக்கு உணவு தயார் செய்து கொண்டிருந்தேன். எழுந்து உட்கார்ந்து இருந்தாள். ஸ்கூலுக்கு கிளம்பு என்றேன். அவளும் தயாரானால் உணவு ஊட்டி விட்டேன், எந்த சூழ்நிலையும் படிப்பை விட்டு விடக்கூடாது, விட்டு விட வேண்டும் என்று நினைக்கவே கூடாது என்றேன்.

ஷர்மிளா: ம்ம்

சரஸ்வதி: உன்ன மாதிரி கஷ்டப்பட்டு படித்து வருபவர்கள் பின்னாளில் நல்லா இருப்பாங்க. என்மேல கோவிச்சுக்கிட்டு மதியம் சாப்பிடாமல் வராத. இனிமேல் இந்த மாதிரி எப்பவும் எதுவும் என் மேல சத்தியமா  நடக்காது.

பத்து ரூபாய் கொடுத்து ஏதாவது ஸ்கூல்ல வாங்கி சாப்பிடு என்றேன்.

ஷர்மிளா: நீ எப்பவும் ரெண்டு ரூபாய் தானே தருவ, இன்னைக்கு என்ன அதிசயமா இருக்கு பத்து ரூபாய் தார.

சரஸ்வதி: இப்படி உனக்கு நிறைய பிடிச்சது இருக்கும், வாங்கி சாப்பிடு அம்மா உனக்கு என்னென்ன பிடிக்குமோ அதை எல்லாம் வாங்கி தருவேன். நீ கவலைப்படாமல் வயித்த காயப்படாத காய போடாதே.

சர்மிளாவில் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு உள்ளே வந்து ஏதோ யோசணையில் உட்கார்ந்து இருந்தேன். வேலைக்கு கிளம்ப ஆரம்பித்தேன். அதற்குள் என் மாமியார் வந்தார், காப்பி போட்டு கொடுத்தேன்.

மாமியார்: என்ன சொல்றதுன்னே தெரியல, நல்லா இருந்த குடும்பம் யார் கண்ணு பட்டுச்சோ இப்படி ஆகிவிட்டது. ஒரு நல்ல நாள் வரும் நீ கவலைப்படாத! ஒரு ரெண்டு நாள் கழிச்சு நீ வருவாய் என்று நான் அவனிடம் சொல்கிறேன்.

சரஸ்வதி: இல்லைங்க அத்தை, நான் அவரை விட்டு நிரந்தரமா வந்துட்டேன்.

மாமியார்:  அதுக்கு இல்லடி சர்மிளாவுக்கு, அப்பா வேண்டாமா ?

சரஸ்வதி: அவளுக்கு படிப்பு தான் வேணும். இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட அவர் வேலைக்கு போய் இருப்பாரா ? நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று தெரியுமா உங்களுக்கு? நீங்க 300 ரூபாய் சம்பாதித்து தருகிறவன் யாரையாவது எப்படி இருந்தாலும் பரவாயில்லை வாழ தயாரா இருக்கிறேன். தயவு செய்து இது விஷயமா பேசாம கோபித்துக் கொள்ளாமல் கிளம்புங்கள். மாமாவை உடம்பை  பார்த்துக் கொள்ளுங்கள்.

மாமியார்:  நான் தான் அவனை நல்ல முறையில் வளர்க்க வில்லை. உனக்கு பெரிதும் துன்பம் கொடுத்துவிட்டேன் . என்னை மன்னித்துவிடு.

என் அம்மா வந்தாள் என்னதான் இருந்தாலும், நீ அவங்களை அப்படி பேசி இருக்க கூடாது. கொஞ்சம் நிதானமா பேசி இருக்கலாம்.

சரஸ்வதி: சரி நிதானமா இப்ப சொல்றேன். நீ வாய மூடிட்டு இரு, வேற ஏதாவது சொல்லிட போறேன்.

காபி குடிக்காம ஆறிப் போயிருந்தது. அதை சூடு பண்ணி குடிச்சிட்டு வீடு சுத்தம் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். முதல்ல தேவையில்லாத பொருள்,  தேவையான பொருள் என இரண்டாக பிரிக்கணும். அப்புறம் தேவையான பொருளை மட்டும் வச்சிக்கிட்டு, இனி தேவை இல்லாத பொருளை வெளியில் போட்டு விடணும். வெளியில போட வேண்டிய பொருட்களை ரொம்ப கவனமா பார்க்கணும், அந்த புத்தகத்துக்குள் ஏதாவது கோப்புகள் இருக்கா, என்னன்னு பார்த்துட்டு வைக்கணும்.

தேவையானது மற்றும் தேவையில்லாதது என்று பிரித்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் அருகில் உட்கார்ந்து இருந்தாள். அம்மாவால் முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை.

இந்த தேவையற்ற பொருட்களில் இருந்து, எனது பெயருக்கு ஒரு கவர் இருந்தது. அதை பிறித்து படித்தேன். நர்சிங் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதம். அழுகையும் கோபமாக வந்தது. அம்மாவிடம் இது பற்றி கேட்டு சத்தம் போட்டேன். எந்த வீடாக இருந்தாலும் அம்மாவிடம் மட்டுமே சத்தம் போட முடியும். அப்பாவிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.

போன் வந்தது, எம்பிளாய்மெண்ட் ஏஜென்சில் இருந்து மலர்.

மலர்: அக்கா எனக்கு தெரிந்த ஒரு ஹோட்டலில் வேலை இருக்கு. அவர் நாளை வரச் சொன்னார். நீங்கள் நாளைக்கு வர முடியுமா ?

நான் நாளைக்கு வரேன், இன்னைக்கு வேண்டுமானாலும் வரேன்.

மலர்: ஓனர் இன்று கடைக்கு வர மாட்டார் ஆகையால் நீங்கள் நாளை போய் அவரை பாருங்கள். ஆல் தி பெஸ்ட்

ரொம்ப நன்றி மா

 

ஹோட்டலில் இன்டர்வியூ.

ஓனர்: இதுக்கு முன்னாடி எங்கம்மா வேலை பார்த்த ?

என்ன வேலை தெரியும் ? சமைக்க தெரியுமா ?

சரஸ்வதி: சாரி சார், இதுக்கு முன்னாடி நான் எங்கயும் வேலை பார்க்கல. சமைக்க தெரியும் சார்.

ஓனர்: நீ நினைக்கிற மாதிரி, இது நாலு பேருக்கு சமைக்கிற வேலை இல்ல நிறைய பேருக்கு சமைக்கணும்.

சரஸ்வதி: அப்படியே கூட மாட நின்னு கத்துப்பேன் சார்

ஓனர்: டேபிள் கிளீன் பண்ணனும், ஹோட்டல்ல உள்ள வெளிய கூட்டணும், பாத்திரம் கழுவனும். ஏதோ அந்த பொண்ணு மலர் சொன்னது. டேபிள் தொடைக்க ஆயிரம் பேர் டிகிரி படிச்சிட்டு வெளிய நிக்கிறாங்க, அதனால ஒழுங்கா வேலை செய்யணும் என்ன புரியுதா ?

சரஸ்வதி: சார் எனக்கு வயசு 45. இதுவரைக்கும் சமைக்கிறதும், பாத்திரம் தேய்க்குறதும், பெருக்குற வேலை தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஓனர்: என்ன சம்பளம் எதிர்பார்க்கிற ?

சரஸ்வதி: சார், நீங்க வேலை கொடுத்தா போதும் சார். நீங்க எது கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் சார்.

ஓனர்: சரி மா இந்த வாரத்தில் வந்து சீக்கிரம் வேலைக்கு சேர்ந்துடு.

சரஸ்வதி: சரி சார், ரொம்ப நன்றி சார்.

மறுநாளே வேலையில் சேர்ந்தேன்.

இன்று முழுவதும் டேபிள் சுத்தப்படுத்துவதும், கூட்டி, பெருக்குவதும் பாத்திரங்களை கழுவி வைப்பதுதான் வேலை. ஓனர் அவ்வப்போது வந்து நான் செய்யும் வேலையை கவனித்து வந்தார். நான் செய்கின்ற வேலைகளில் எப்போதும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் செய்வேன்.

வேலை முடிந்து, கிளம்பும்போது நாளைக்கு வா என்றார். 2000 ரூபாய் கொடுத்து செலவுக்கு வைத்துக்கொள் என்றார்.

நன்றி சார், மாதமாதம் 500 ரூபாய் வீதம் பிடித்துக் கொள்ளுங்கள் என்றேன்.

மலரை தொடர்பு கொண்டேன். நான் வேலைக்கு சேர்ந்து, இன்று முதல் நாள் வேலை முடிந்தது. ரொம்ப நன்றி, நீ எனக்கு வேலை தேடி தரவில்லை, என் மகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறாய்.

நாம் செய்யும் சிறு உதவி, ரொம்ப ரொம்ப சிறு உதவி மற்றவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் ஆகையால் நாம் எப்போதும் நம்மால் இயன்ற உதவியை மற்றவருக்கு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சரஸ்வதி: மலர், நாளை உணவு இடைவெளியின் பொழுது வந்து மீதி பணம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறேன்.

மலர்: இல்லக்கா, நான் பணம் போட்டு ஓனரிடம் கொடுத்து விட்டேன். உங்களால் முடிந்தால் தாருங்கள், இல்லை என்றால் பரவாயில்லை.

நான் போனை வைத்து விட்டேன். நம்மை சுற்றி அழகான மனிதர்கள் இருக்கிறார்கள், நாம் தான் கண்ணை திறந்து பார்ப்பதில்லை.

இந்த பணத்தை முதலில் என் மகளிடம் தான் கொடுப்பேன். பிறகு வாங்கிக் கொண்டேன். தேவையான மளிகை சாமான்கள் வாங்க வேண்டும். நல்ல உணவு கொடுத்து அவளுக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவளுக்கு கொஞ்சம் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும். அவளின் பெயரில் கொஞ்சம் பணம் அஞ்சல் துறை வங்கியில் சேர்த்து வைக்க வேண்டும். வீடு வந்து சேர்ந்தேன். ஷர்மிளாவிடம் கொடுத்தேன். அவளும் சந்தோஷமாக இருந்தாள்.

ஷர்மிளா: அம்மாவை கட்டிக் கொண்டேன் என் அம்மாவின் புடவையில் வியர்வை நாற்றமடித்தது. அதுதான் உலகில் மிகவும் உயர்வான வாசனை, உழைப்பின் வியர்வையின் மூலம் வரும் வாசனை.

நான் சென்று எல்லோருக்கும் காபி போட்டு வந்தேன். எனக்கு ஒரு முத்தம் கொடுத்தால் மகள் கொடுத்த முத்தம் மனதுக்கு இதமாக இருந்தது. ஏதோ நான் அங்கீகரிக்கப்பட்டவள் போல உணர்ந்தேன். அம்மாவிடம் சொன்னேன் கண் கலங்கினாள்.

காபி குடித்து முடிப்பதற்குள் அப்பா நொண்டிக்கொண்டு வந்தார். காலில் அடிபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. ஷர்மிளாவை ஆட்டோ பிடித்து வரச் சொல்லிவிட்டு, அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் காத்திருந்தோம்.

ஆட்டோ வந்தது. டாக்டரிடம் காண்பித்து, படுக்கைக்கு கொடுத்து அதில் குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். அப்போது அப்பா என்னை கூப்பிட்டு அந்த நர்ஸ் ஷர்மிளா போல் இருக்கிறாள். ஷர்மிளாவை நாமும் நர்ஸுக்கு படிக்க வைக்க வேண்டும் என்றார்.

சரஸ்வதி: ஏன், நான் படிச்சா யாரோடு ஓடிப் போயிடுவேன். அவள் படித்தால் யாரோடும் ஓடிப் போக மாட்டாளா ? இல்ல ஓடிப் போனா பரவாயில்லையா?

உங்கள் பிள்ளை ஓடிப் போகக்கூடாது ஆனால் என் மகள் ஓடி போகலாமா ?

நர்ஸ்:  இது ஒன்னும் சந்தை இல்லை, ஆஸ்பத்திரி எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க என்றாள்.

அவளை என்னிடம் வருமாறு கூப்பிட்டேன். நான் உன்னைப்போல் நர்ஸ் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு ஆனால் எனக்கு வந்த அட்மிஷன் கார்டை மறைத்து வைத்து என்னை படிக்க விடவில்லை. ஒருவனே பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர் கல்யாணம் ஆன நாளில் இருந்து, ஒருமுறை கூட வேலைக்கு சென்றதில்லை. நான் அவரை விட்டுப்  பிரிந்து வந்து படாத பாடுபட்டு வேலை பார்த்து வருகிறேன். நான் சம்பாதித்த பணத்தில் தான் இன்று அவரின் மருத்துவ செலவு பார்க்கிறேன் என்று பொலபொலவென அழுதேன்.

 

நர்ஸ்:  அக்கா அழாதீங்க! கவலைப்படாதீங்க! ஏன் சார் பெண் பிள்ளைகளை படிக்க வைக்காம என்ன சார் பண்ண போறீங்க ? கல்வி என்பது வெறும் படிப்பு மட்டும் இல்லை. அதனால் அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் எந்த சூழ்நிலையும் நம்ம குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும் அப்படிங்கற நம்பிக்கை. .பெண் பிள்ளைகளை படிக்க வையுங்க சார்.


2 கருத்துகள்:

விருந்து -

  விருந்து -  நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக...