இரண்டு முதியவர்கள்
இரண்டு முதியவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் அதில் ஒருவர் எனக்கு தாகமாக இருக்கிறது நான் அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்று தண்ணீர் அருந்திவிட்டு உங்களுக்கும் தண்ணீர் கொண்டு வந்து உங்களிடம் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்கிறார் மற்றவரும் சென்று வாருங்கள் என்று சொல்கிறார் அவர் ஒரு கிராமத்தில் வீட்டின் முன்பு செல்கிறார் அப்பொழுது அந்த வீட்டிற்கு முன்னாடி ஒரு முதியவர் சுயநினைவு இல்லாமல் படுத்து கிடக்கிறார்
அதை பார்த்துவிட்டு வீட்டினுள் செல்கிறார் அங்கு இருக்கும் அவரது மனைவி மகள்கள் பேரன் பேத்திகள் அனைவருமே சுயநினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அப்பொழுது அவர் யோசனை செய்கிறார் எதனால் இவர்கள் எல்லாம் மயக்கம் அடைந்து கிடக்கிறார்கள் என்று அப்பொழுது அவர் அவருக்கு புரிகிறது இவர்கள் அனைவரும் பசியில் மயக்கத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறார் அதன் பிறகு அருகில் இருக்கும் கடைக்கு சென்று பால் ரொட்டி அனைத்தையும் வாங்கி வந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம இரவில் தங்கி இருந்துவிட்டு நாளைக்கு புனித பயணத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்கிறார்
அதன் பிறகு இந்த வீட்டில் இருந்த அனைவரும் மயக்கத்தில் இருந்து தெளிவாகி விட்டார்கள் இருந்தாலும் இவரால் அவர்களை விட்டு செல்ல முடியவில்லை அதன் பிறகு மறுபடியும் கடைக்கு சென்று உணவுப் பொருள்களை வாங்கி வந்து அருகில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் இறைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி கொடுக்கிறார் அதன் பிறகு இவர் புனித பயணத்தை தொடங்கலாம் என்று நினைக்கும் பொழுது அவர்களை விட்டு செல்ல மனமில்லை அவர்களுக்கு ஏதாவது நம்மால் முடிந்த வருமானத்திற்கான வழி செய்து கொடுத்துவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்கிறார்
அதன் பிறகு இவர் வருமானத்திற்காக ஒரு குதிரையை அவர்களிடம் வாங்கி கொடுத்து அதை வைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள் அதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைகிறார்கள் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இருந்த பேரப்பிள்ளைகள் அனைத்தும் தாத்தா தாத்தா என்று இவரை பாசத்தோடு அழைக்கிறார்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அதன் பிறகு இவர் புனித பயணம் மேற்கொள்வதற்கான முயற்சியில் தன் கையில் இருந்த பணப்பையை பார்க்கிறார் அதில் புனித பயணம் தொடர்ந்து செல்வதற்கு போதுமான பணம் இல்லாததா அவர் மறுபடியும் வீட்டிற்கு திரும்பி சென்று விடுகிறார் இவர் வீட்டிற்கு சென்று இவர் செய்து வந்த தொழில் தேனீக்கள் வளர்த்து தேன் வியாபாரம் செய்வது வருகிறார் இவர் அந்த தேனீக்களை போய் பார்க்கும் பொழுது நார்மலாக இருக்கும் தேனை விட அதிக தேனை சேமித்து வைத்திருந்தது இந்த தேனீக்கள் அவர் வருகைக்காக நான் இந்த சிறுகதையை 20 வருடங்களுக்கு முன்னால் திரும்பத் திரும்ப தொடர்ந்து பல இரவுகள் விடிய விடிய இந்த கதையை படித்துக் கொண்டிருந்தேன் அன்று எனக்கு கிடைத்த ஒரு வெளிச்சம் கிடைத்து
அதன் பிறகு நான் என் தலையில் இருந்த ஆணவம் அகங்காரம் தற்பெருமை பிடிவாதம் இவை அனைத்தையும் எனது தலையில் இருந்து எடுத்து விட்டேன் அதன் பிறகு எனது பணப்பையை எடுத்து இல்லாதவர்கள் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு எனது பணப்பையை வெற்றிடமாகவே வைத்துக் கொண்டிருக்கிறேன் அதன் பிறகு எனது பணப்பையை யாரோ ஒரு விதத்தில் எனது பணப்பையை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் நானும் அதை வெற்றிடமாகவே வைத்திருக்கிறேன் நான் இன்று 10க்கும் மேற்பட்ட பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவே நான் இந்த புத்தகத்தில் கறறுக்கொண்ட மிகப்பெரிய பாடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக