சாமி ஆட்டம்
4/12/2024
ஒழுங்கா உன் பேரை சொல்லு..பேய் பிடித்ததாக இளம்பெண்ணுக்கு அடி! பூசாரிக்கு பொளேர் விட்ட ’ஐயப்ப’ சாமி!
- என் ஊரில் இதுபோல நடப்பது உண்டு.ஒரு முறை சிறு வயது பெண் பிள்ளைகளை அழைத்து சென்று சப்த கன்னிகள் என்று சாமி ஆட சொல்வார்கள். நானும் சென்று வேடிக்கை பார்ப்பது உண்டு. அங்கு மெய்மறந்து ஆடும் பிள்ளைகளை நான் பெயரை சொல்லி அழைத்து ஸ்டெப்பை மாற்றி ஆடு என்று புது ஸ்டெப் போட்டு ஆடி காண்பிப்பேன். எனக்கு இரவு போன் அழைப்பு 1:30 மணிவாக்கில் வரச்சொன்னர்கள். பேய் பிடித்து இருந்ததாக சொல்லி ஒரு பெண்ணை பிரம்பால் அடித்து கொண்டிருந்தார் சாமியார்கள் இருவர். அந்த பெண்ணன் கணவரிடம் சொன்னேன். அவர் சாமியாடும் போது நாம் என்ன முடியும் என்றார். அப்போதுதான் எனக்கு நானும் சாமியார் என்று நியாபகம் வந்தது. அவர்களுக்கு இடையில் சென்றேன். எனக்கு பிரம்பு சரி பட்டு வராது ஆகையால் திருசூலத்தை பிடுங்கி சாமியார்களை குத்த ஓங்கினேன். சாமியார்கள் என்ன செய்கிறாய், இது எல்லாம் சாமி குத்தம் ஆகி விடும் என்றார்கள். உங்களுக்கு தான் பேய் பிடித்து இருக்கிறது, இன்னொரு முறை பிரம்பை ஓங்கினால் நான் குத்தி விடுவேன் என்றேன். அன்றிலிருந்து எங்கள் ஊரில் யாருக்கும் பேய் பிடிப்பதில்லை அப்படியே பிடித்தாலும் யாரும் பிரம்பை எடுப்பதில்லை. சப்த கன்னிகளும் வருவதில்லை. ( 2007 - 2008 நடந்தது )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக