வியாழன், 9 ஏப்ரல், 2026

இளைஞர்களின் புத்திசாலிதனம்

 இளைஞர்களின் புத்திசாலிதனம்


ஒருவர் மூன்று மணி நேரம் வெகு சாதாரணமாக என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட் பற்றி துருவி துருவி விசாரித்து சென்றார். அவரிடம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லை மாறாக பணம் சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. 


நான் இன்றைய இளைஞர்களை புத்திசாலிகளாக மட்டுமே பார்க்கிறேன். எப்படி இவன் சம்பாதிக்கிறான், இவனிடமே கற்றுக்கொண்டு இவனையே போட வேண்டும். இது தான் அவன் குறிக்கோள். 


நான் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தேன். மீதி 4 மணி நேரத்தில் தான் சமைப்பது,  துணி துவைப்பது,  அயன் செய்வது மற்றும் உறங்குவது. இப்படியே சுமார் 20 மணி நேரம் படித்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 


ஆனால் அவர் மூன்று மணி நேரத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விட்டு சென்று விட வேண்டும். நான் ஒரு android app செய்து online விட்டேன். அதனால் என்ன லாபம் என்று கேட்டார். அந்த app இன் idea ஒருவேளை கிளிக் ஆனால் எனக்கு பணம் வரும் அதற்க்கு சில காலம் ஆகலாம் என்றென். 


Google policy change ஆகி சுமார் ஒரு 12 அல்லது 15 பேர்  review எழுத வேண்டும் என்றார்கள். நான் அவரிடமும் கேட்டேன். அந்த app download செய்ய 100 ரூபாய் ஆகும். அவர் என்னிடம் 100 ரூபாய் இல்லை என்றார். சரி என்று நான் 100 ரூபாய் அனுப்பி விட்டேன் ஆனால் அவர் review எனக்கு எழுத வில்லை. review தான் எழுத வில்லையே அப்புறம் அந்த பணத்தை எனக்கு திருப்பியும் அனுப்பல.  காரணம் அந்த app மூலம் எதாவது பெரிய தொகை கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்று வயிறு எரிகிறது. Bloody fool. அதற்க்கு அவர் அந்த app இல் இந்த மாதிரி நியூ feature சேர்க்கலாம் என்றார். ஓத்தா அதற்க்கு ஒம்மாளா பணம் தருவாள் இன்னும் development செய்வதற்கு.  அவனவன் என்ன எல்லாம் முயற்சி செய்து முன்னேறி வருகிறான். இதிலே எனக்கு அட்வைஸ் மயிறு வேற. அதிலிருந்து என்னை கண்டால் மறைந்து கொள்வார். 


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

பெண்களின் தற்போதைய நிலை

 பெண்களின் தற்போதைய நிலை 



நேற்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழியாக வரவேண்டிய சூழ்நிலை இருந்தது

அப்பொழுது அந்த பல்கலைக்கழகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை ஒருவன் பைக்கில் சுற்றி தொல்லை செய்து கொண்டிருந்தான். வண்டியை நிப்பாட்டி விட்டு அந்த பெண்ணிடம் சென்று ஏதோ சத்தம் போட்டு வண்டியில் ஏற சொல்லி சத்தம் போட்டு கொண்டிருந்தான். நான் காரை நிப்பாட்டி விட்டு இவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவள் அவனுடன் செல்ல மறுத்து பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள.

அவன் அங்கும் சென்று அமந்துகொண்டான். அவன் எழுந்து எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள். எனக்கு பொறுமை இல்லை. நான் காவல்துறைக்கு போன் செய்து சொன்னேன். அவர்கள் சரியாக கேட்கவில்லை என்றார்கள். நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கூப்பிடுகிறேன். என்னை அழையுங்கள் என்று கூறிவிட்டு வைத்துவிட்டேன். 

நான் பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன், கண்ட்ரோல் ரூமில் இருந்து அழைத்து விசாரித்தார்கள். பிரச்சினையை சொல்லி நான் இங்கேயே இருக்கிறேன் வாருங்கள் என்றேன். அதற்குள் அவன் பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு தென்காசி பக்கம் சென்று விட்டான். 

காவல்துறையினர் வந்து விட்டார்கள். அவர்களிடம் விவரத்தை சொல்லி,  அவர்கள் சென்ற வழியையும் சொல்லி தினமும் இங்கே பாதுகாப்பு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று பேசி முடித்துவிட்டு வந்தேன். 

குறிப்பு: 

அந்த இடத்தில் இருந்து ஆண் மற்றும் பெண்கள் சுமார் 300 பேருக்குமேல் இருந்தும் ஒருவர் கூட ஏன் என்று அந்த பெண்ணுக்காக சென்று கேட்கவில்லை. இதே அவர்கள் வீட்டு பிள்ளை என்றால் இப்படி சும்மா நிப்பார்களா?  எனக்கு மனசே சரியில்லை. தப்பு நடக்கும் போது பார்த்துவிட்டு போக முடியவில்லை, என்னமோ தொண்டையில் வலிக்குது,  உடம்பெல்லாம் நடுங்குது. அந்த பெண்ணோட தாய்,  தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க அனுப்பி இருப்பார்கள். இந்த தலைமுறையோட நாம் பட்ட கஷ்டம் போதும் நீயாவது நல்லா இருக்க வேண்டும் என்று தான் எல்லா தாயும் தந்தையும் படிக்க அனுப்பி வைக்கிறார்கள். 

நான் மீண்டும் சொல்லிவருவது மனிதர்களிடம் பேச விரும்புவதில்லை. நல்ல எண்ணம் இருப்பதில்லை,காட்டுமிராண்டி கூட்டம் அதனால் தான் உங்கள் பார்வைக்கு பைத்தியம் மாதிரி வாழ்ந்து வருகிறேன். 

நான் சென்ற மாதம் துப்பாக்கி லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்க போனேன். என் நண்பர் ரங்கன் தடுத்து விட்டார். நமக்கு தேவையில்லை என்று சொல்லி விட்டார். 




ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

இந்தியாவில் தேர்தல் - 2026

 இந்தியாவில் தேர்தல் - 2026


ஜனநாயக கோட்பாடும் நடைமுறையும்:

சாதியும் வகுப்புவாதமும் தான் இந்திய தேர்தல்களின் மையக்கரு


அரசியலின் குற்றமயமாதல்:

தேர்தல்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றனவா?



இந்தியாவிற்குப் ஜனநாயகம் பொருத்தமானதா?


இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்தும், மேலும் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளது.


எனவே, இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது: ஜனநாயகம் இந்தியாவிற்குப் பொருத்தமானதா?


பொதுவாகவும், கொள்கை ரீதியாகவும் பார்க்கையில், ஜனநாயகம் என்பது மிகவும் இனிமையான ஒரு சொல்லாகவே ஒலிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களே தங்களை ஆண்டுகொள்வதை விடச் சிறந்தது வேறு என்ன இருக்க முடியும்?


ஆனால் இந்தியாவில் அது உண்மையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையே காண வேண்டும்.


இந்திய அரசியலைப் பற்றிச் சிறிதளவேனும் அறிந்த எவருக்கும், இந்தியாவில் அரசியல் என்பது பெரும்பாலும் சாதி மற்றும் மத ரீதியான வாக்கு வங்கிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்பது தெரியும். நமது மக்களில் 90 சதவீதத்தினர் வாக்களிக்கச் செல்லும்போது, ​​அவர்கள் வேட்பாளரின் தகுதியையோ — அவர் நல்லவரா, கெட்டவரா, படித்தவரா, படிக்காதவரா, குற்றப் பின்னணி கொண்டவரா இல்லையா போன்ற அம்சங்களையோ — கருத்தில் கொள்வதில்லை. மேலும், வேலையின்மை பெருகுகிறதா அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறதா என்பதையும் அவர்கள் தங்கள் மனதில் கொள்வதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் வேட்பாளரின் சாதி அல்லது மதம் மட்டுமே (அல்லது அவர் சார்ந்த கட்சி தான் பிரதிநிதிப்பதாகக் கூறும் சாதி அல்லது மதம் மட்டுமே).


2024 மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குற்றப் பின்னணியைக் கொண்டிருந்தனர் என்பதே இதற்குச் சான்றாகும்.


இது எதை நிரூபிக்கிறது? இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள், தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் ஒரு குற்றவாளியா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; அவர்கள் அவருடைய சாதியையோ அல்லது மதத்தையோ மட்டுமே பார்க்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. டஜன் கணக்கான மக்களைக் கொன்ற, மிகவும் இழிபுகழ் பெற்ற ஒரு கொள்ளையரான பூலன் தேவி, தான் போட்டியிட்ட தொகுதியில் பெரும்பான்மையாக இருந்த ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



சாதியமும் வகுப்புவாதமும் நிலப்பிரபுத்துவச் சக்திகளாகும்; இந்தியா முன்னேற வேண்டுமெனில் இவை அழிக்கப்பட வேண்டும். ஆனால், (இந்தியாவில் நடைமுறையில் உள்ள) ஜனநாயகம் இச்சக்திகளை மேலும் வலுப்படுத்தி, ஆழமாக வேரூன்றச் செய்கிறது (ஏனெனில், அது இச்சக்திகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது). அப்படியிருக்கையில், ஜனநாயகம் இந்தியாவிற்கு நன்மை பயப்பதாக எப்படிக் கூற முடியும்?


ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைக்குமான அளவுகோல் ஒன்றே ஒன்றுதான்: அது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறதா? அது அவர்களுக்குச் சிறந்த வாழ்க்கையை அளிக்கிறதா? அந்தப் பார்வையிலிருந்து பார்க்கையில், இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகம் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை அளிப்பதில்லை என்பது தெளிவாகிறது.



எடுத்துக்காட்டாக, வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் என்ன, அல்லது அதிமுக வெற்றி பெற்றால் என்ன — அதனால் என்ன பயன்? தமிழக மக்களுக்கு இது சற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல; ஏனெனில், பெரும்பாலான தமிழர்களின் அவலமான வாழ்க்கையில் இது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.



பீகாரில் தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்பட்டிருந்தாலும்கூட, பெரும்பாலான பீகார் மக்கள் சாதி மற்றும் மத ரீதியிலேயே வாக்களித்திருப்பார்கள். அதிகபட்சமாக, இது தலைமைத்துவத்தில் ஒரு மாற்றத்தை — அதாவது, நிதிஷ் குமாருக்குப் பதிலாக தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை — ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், பெரும்பாலான பீகார் மக்களின் அவலமான வாழ்க்கையில் இது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது.


ஜனநாயகம் என்பது பகுத்தறிவுள்ள மனங்களைக் கொண்ட மக்களுக்காகவே அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். ஆனால், பெரும்பாலான இந்தியர்களின் மனங்கள் சாதியவாதம் மற்றும் மதவாதத்தால் நிரம்பியுள்ளன. அப்படியிருக்கையில், ஜனநாயகம் இந்தியாவிற்குப் பொருத்தமானது என்று எப்படிக் கூற முடியும்?



- Katju sir

இரண்டு முதியவர்கள்

 இரண்டு முதியவர்கள்



        இரண்டு முதியவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் அதில் ஒருவர் எனக்கு தாகமாக இருக்கிறது நான் அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்று  தண்ணீர் அருந்திவிட்டு உங்களுக்கும் தண்ணீர் கொண்டு வந்து உங்களிடம் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்கிறார் மற்றவரும் சென்று வாருங்கள் என்று சொல்கிறார் அவர் ஒரு கிராமத்தில் வீட்டின் முன்பு செல்கிறார் அப்பொழுது அந்த வீட்டிற்கு முன்னாடி ஒரு முதியவர் சுயநினைவு இல்லாமல் படுத்து கிடக்கிறார் 



அதை பார்த்துவிட்டு வீட்டினுள் செல்கிறார் அங்கு இருக்கும் அவரது மனைவி மகள்கள் பேரன் பேத்திகள் அனைவருமே சுயநினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அப்பொழுது அவர் யோசனை செய்கிறார் எதனால் இவர்கள் எல்லாம் மயக்கம் அடைந்து கிடக்கிறார்கள் என்று அப்பொழுது அவர் அவருக்கு புரிகிறது இவர்கள் அனைவரும் பசியில் மயக்கத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறார் அதன் பிறகு அருகில் இருக்கும் கடைக்கு சென்று பால் ரொட்டி அனைத்தையும் வாங்கி வந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம இரவில் தங்கி இருந்துவிட்டு நாளைக்கு புனித பயணத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்கிறார் 




அதன் பிறகு இந்த வீட்டில் இருந்த அனைவரும் மயக்கத்தில் இருந்து தெளிவாகி விட்டார்கள் இருந்தாலும் இவரால் அவர்களை விட்டு செல்ல முடியவில்லை அதன் பிறகு மறுபடியும் கடைக்கு சென்று உணவுப் பொருள்களை வாங்கி வந்து அருகில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் இறைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி கொடுக்கிறார் அதன் பிறகு இவர் புனித பயணத்தை தொடங்கலாம் என்று நினைக்கும் பொழுது அவர்களை விட்டு செல்ல மனமில்லை அவர்களுக்கு ஏதாவது நம்மால் முடிந்த வருமானத்திற்கான வழி செய்து கொடுத்துவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்கிறார்  





அதன் பிறகு இவர் வருமானத்திற்காக ஒரு குதிரையை அவர்களிடம் வாங்கி கொடுத்து அதை வைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள் அதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைகிறார்கள் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இருந்த பேரப்பிள்ளைகள் அனைத்தும் தாத்தா தாத்தா என்று இவரை பாசத்தோடு அழைக்கிறார்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அதன் பிறகு இவர் புனித பயணம் மேற்கொள்வதற்கான முயற்சியில் தன் கையில் இருந்த பணப்பையை பார்க்கிறார் அதில் புனித பயணம் தொடர்ந்து செல்வதற்கு போதுமான பணம் இல்லாததா அவர் மறுபடியும் வீட்டிற்கு திரும்பி சென்று விடுகிறார் இவர் வீட்டிற்கு சென்று இவர் செய்து வந்த தொழில் தேனீக்கள் வளர்த்து தேன் வியாபாரம் செய்வது வருகிறார் இவர் அந்த தேனீக்களை போய் பார்க்கும் பொழுது நார்மலாக இருக்கும் தேனை விட அதிக தேனை சேமித்து வைத்திருந்தது இந்த தேனீக்கள் அவர் வருகைக்காக நான் இந்த சிறுகதையை 20 வருடங்களுக்கு முன்னால் திரும்பத் திரும்ப தொடர்ந்து பல இரவுகள் விடிய விடிய இந்த கதையை    படித்துக் கொண்டிருந்தேன் அன்று எனக்கு கிடைத்த ஒரு வெளிச்சம்   கிடைத்து   



அதன் பிறகு நான் என் தலையில் இருந்த ஆணவம் அகங்காரம் தற்பெருமை பிடிவாதம்  இவை அனைத்தையும் எனது தலையில் இருந்து எடுத்து விட்டேன் அதன் பிறகு எனது பணப்பையை எடுத்து இல்லாதவர்கள் அனைவருக்கும் உதவி செய்து கொண்டு எனது பணப்பையை வெற்றிடமாகவே வைத்துக் கொண்டிருக்கிறேன்  அதன் பிறகு எனது பணப்பையை யாரோ ஒரு விதத்தில் எனது பணப்பையை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் நானும் அதை வெற்றிடமாகவே வைத்திருக்கிறேன் நான் இன்று 10க்கும் மேற்பட்ட பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவே நான் இந்த புத்தகத்தில் கறறுக்கொண்ட மிகப்பெரிய பாடம்

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

விருந்து -

 

விருந்து - 

நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக்காது ஆகையால் 1 மணி நேரம் முன்னதாகவே சென்றேன். எங்களுக்கு முன் 4 பெண்கள் selfi எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நான் மின் விசிறி இருக்கும் இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். ஓரு மணி நேரம் சென்று எனக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. 


எனது மகனிடம் சொல்லி கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று அனுப்பினேன். அவன் எங்கும் தண்ணீர் இல்லை. கிச்சனில் கேட்டேன் அவர்கள் மொண்டு குடிக்க சொன்னார்கள் என்றான். எனக்கு இல்லை எனது அப்பாவிற்கு என சொல்லி இருக்கிறான். அதற்க்கு அவரை வந்து குடிக்க சொல்லுங்கள் என்றான். 


நான் கிச்சன் சென்று வாட்டர் பாட்டில் வாங்கி குடித்து விட்டு சிறிது நேரம் பசியை ஆற போட்டேன் ஆனால் எனக்கு சராசரி இந்தியனுக்கு இருக்கும் பிரஷர், சுகர் மட்டும் இல்லை இன்னும் இரண்டு வியாதிகள் இருந்தது. அது மனிதர்களிடம் பேசும் போது ஓரு வித பயமும் பதட்டமும் தொற்றிக்கொள்ளும் மற்றொன்று ஓரு மருத்துவ முழு என்னை ஆய்வு செய்து ரொம்ப ரொம்ப அரிதான பைத்தியம் என்றார்கள். அது பைத்தியத்தில் அரிதானது என்றால் மற்றவர்கள் என்னை பார்க்கும் போது நான் நார்மலாக இருப்பதாக தெரிந்தால் அப்போது பைத்தியம் பிடித்து இருக்கிறேன் என்று அர்த்தம் ஆனால் நீங்கள் பார்க்கும் போது நான் பைத்தியம் பிடித்தது போல இருந்தால் அப்போது நான் நார்மலாக இருக்கிறேன் என்று பொருள். 


பசியில் இருக்கும் போது எனக்கு வயிறு கபகப என்று இருக்கும் அதே பைத்தியம் பிடித்து பசியில் இருக்கும் போது கை கால்கள் நடுங்கும் மயக்கம் வருவது போல இருக்கும். உணவு தயார் ஆகிவிட்டது ஆனால் தரப்படவில்லை, மணி 12.30 தாண்டியவுடன் பசி மயக்கத்தை நெருங்கி கொண்டு இருந்தேன் இதை நன்றாக புரிந்து கொண்ட மகன் வாருங்கள் வெளியில் சென்று சாப்பிடுவோம் என்றான். வெளியில் வரும்போது இனிப்பு பீடா தயார் செய்து இருந்தவரிடம் ஒன்று போட்டு கொண்டேன். அதன் பிறகு தான் பசி அதிகரித்து ஓரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் வீடு சென்று உறங்கி விட்டேன். 


எழுந்த பின்பு ஓரு தேநீர் அருந்துவிட்டு ஒவ்வொருவராக போன் செய்து அழைத்து என்ன காரணம் உணவு தயார் ஆன பின்பும் உணவு தரப்படவில்லை என்று கேட்டேன். எனக்கு மந்தபுத்தி எதையும் புரிந்து கொள்ள முடியாது, ரொம்ப late ஆக தான் புரியும். ஒருவரிடம் கேட்டால் சமாதானம் ஆக மாட்டேன் ஆகையால் பல பேரிடம் கேட்டு விளக்கம் தெரிந்து கொண்டேன். முதலிலேயே சாப்பாடு போட்டால் இரண்டாவது தடவை பந்தியில் வந்து சாப்பிடுவார்கள் என்றார்கள். 


ஒருவன் பசியிலோ அல்லது உணவின் மேல் உள்ள ஆசையில் இரண்டு அல்லது மூன்று முறைதான் சாப்பிட்டால் என்ன? ? அப்படி சேமித்து என்ன செய்ய போகிறீர்கள்?  என தெரியவில்லை. எனக்கு தான் பைத்தியம் புரியவில்லை உங்களுக்கு புரிந்ததை சொல்லுங்கள். 

பாரதி - தனி ஓரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த உலகை அழித்திடுவோம்.


என் வீட்டில் ஓரு விருந்து உபசரிப்பு, நெருங்கிய நண்பர் சாப்பிட்டு விட்டு என் மனைவியிடமும் அங்கு இருந்தவர்களிடம் சண்டை செய்து இருக்கிறார். என்ன பிரச்சினை என்று போன் செய்து கேட்டேன். கறி குழம்பு, வறுவல் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் ரசத்தில் உப்பு கம்மியாக இருந்தாக சொன்னான். என்னை ஏன் நீங்கள் சமைக்க சொல்ல வில்லை என்றான் ( மருந்து அடித்து விட்டு வந்து சண்டை செய்கிறான் ). அந்த கலவரத்தின் போது நான் ஊரில் இல்லாதது மகிழ்ச்சியே.


இன்னும் பல பகுதிகளில் சுமார் 15/30நாட்கள் அந்த திருமணம்/ அசுப நிகழ்ச்சி நடக்கும் வீட்டிலே தான் அவர்களின் பங்காளி குடும்பங்கள் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். இதை எங்கள் வீட்டில்  நான் பார்த்து இருக்கிறேன்.


இந்த விருந்து என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. 


திருமணதிற்கு முன் மணமகனின் வீட்டிற்கு பெண் வீட்டார்கள் விருந்துக்கு கலந்து கொள்கிறார்கள். பெண் வீட்டார்கள் பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இரண்டு வீட்டார்களும் ஜாமீன் குடும்பத்தார்கள். இந்த திருமணங்கள் திருவிழா போன்று நடக்கும். பெண் வீட்டார்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு இருப்பார்கள். இந்த விருந்து பல மாதங்கள் நீடிக்கும். பல்வேறு வகையான அறுசுவை உணவுகள் மூன்று வேலையும் பரிமாறப்படும். அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடக்கும். 


நாட்கள் செல்ல செல்ல அவர்களின் கையிருப்பு குறைந்து கொண்டே வந்து கடைசியில் கடன் வாங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. ஓரு ஐயரிடம் ( அந்த பகுதியில் செல்வாக்கான நபர் ) கொஞ்சம் கொஞ்சமாக பத்திரத்தை கொடுத்து விட்டு பணம் வாங்கி விருந்து அளித்துள்ளார். ஜாதகம் பார்த்து தேதி குறித்து விட்டு பெண் வீட்டார்கள் அவர்களின் வீட்டிற்கு சென்றார்கள். 


மணமகன் வீட்டார்கள் ஐயரிடம் சென்று கணக்கு வழக்குகள் பார்க்கப்படுகிறது. சுமார் 800 ஏக்கர் விளைநிலம் ஓரு குறிப்பிட்ட நாளில் ரெஜிஸ்டர் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 


இந்த செய்தி யாரோ ஓருவரின் மூலமாக பெண் வீட்டாருக்கு சென்றுவிட்டது. மணமகன் சில நாட்கள் சென்று பெண் வீட்டிற்கு சென்று அவர்களிடம் பரிசு பொருட்களை கொடுத்து விட்டு என்னுடைய கடன் பிரச்சினையால் என்னுடைய நிலங்களை விற்க நேர்ந்து விட்டது. ஆகையால் உங்களுக்கு நிகரான சொத்து மதிப்பில் நான் இல்லை. நான் உங்கள் மகளை நீங்கள் வளர்த்த நிலையில் பார்த்துக்கொள்ள முடியாதது ஆகையால் தயவுகூர்ந்து வேறு யாருக்காவது கொடுங்கள் என்றும் உங்களுடன் பழகிய இந்த நாட்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை நிறைவான திருப்தியும் அளித்தன. அதே நேரம் எங்களால் உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு என்னை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு வந்து விட்டார். 


தன்னுடைய நிலம் முழுவதும் இழந்து விட்ட பின் எவ்வாறு ஓரு மனிதனால் இவ்வளவு மகிழ்ச்சியாக 

இருக்க முடிகிறது. 


விருந்து என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். விருந்து என்ற பேரில் நீங்கள் பாவங்களை செய்து கொண்டு இருக்குறீர்கள். 


இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள். 


மணப்பெண் அந்த மணமகன் தான் வேண்டும் என்று தன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி திருமணம் நன்றாக நடந்து முடிந்தது. மணமகளின் வீட்டார் கொடுக்க முன் வந்த நூறு ஏக்கர் நிலங்களையும் நகைகளையும் பண உதவியையும் மறுத்து ஓரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  இப்படி பட்ட நல்ல குணம் உள்ள மனிதர்களிடம் தான் நட்பு கொண்டு உள்ளேன்.



பஸ்சில் கல் எறிதல்:

பஸ்சில் கல் எறிதல்: 

ஊரில் இருந்து பேருந்து நிலையம் செல்ல சுமார் 2km வயல் வெளியில் ஊடே வரப்பில் தான் செல்ல வேண்டும். செருப்பில் வரப்பில் உள்ள உலை மண் ஒட்டிக்கொண்டு நடக்க கூட முடியாது. ஆகையால் கையில் எடுத்துக்கொண்டு சென்று பேருந்து நிலையம் சென்று வாய்க்காலில் கழுவிக் கொள்வோம். அன்று பரீட்சை ஆகையால் சீக்கிரமே பஸ் நிலையம் வந்து சேர்ந்தோம்.  வழக்கம் போல பேருந்து நிலையத்தில் காத்து இருந்தோம். 


பஸ் வந்தது ஆனால் நிற்க வில்லை. எல்லோருமே மாணவர்கள்,  கற்களை எடுத்து பேருந்தின் மேல் வீசினோம். என் தம்பி கண்ணாடிகளை உடைத்து விட்டான். அவன் கோபப்பட மாட்டான், கெட்ட வார்த்தை பேச மாட்டான், அது ஏன் கிரிக்கெட்டில் குறி பார்த்து சரியாக ஸ்டம்ப் க்கு அடிக்க மாட்டான். 


பஸ்சை நிப்பாட்டி எல்லோரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். எங்களுக்குகெல்லாம் மகிழ்ச்சி ஆனால் வெகு நேரம் நீடிக்கவில்லை. பேருந்தை நேராக காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். எங்களை எல்லாம் இறக்கி காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார்கள் பிறகு நாங்கள் எல்லாம் உயர் அதிகாரிக்காக காத்திருந்தோம். 


உயர் அதிகாரி வந்து 500 ரூபாய் அபதாரம் விதித்தார். அந்த அபதாரத்தை கட்டிவிட்டு நீங்கள் எல்லாம் செல்லலாம் என்றார் அவர். நாங்கள் எங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் வாங்கி 500 ரூபாய் அபராதத்தை செலுத்தினோம் பின்பு பள்ளிக்குச் சென்று பரீட்சை எழுதினோம். நடந்த விவரங்களைச் கூறியபின் பரிட்சை எழுத அனுமதித்தார்கள். 


கல் எறிந்து கண்ணாடியாய் உடைத்த என்னுடைய தம்பி அரசு வேலையில் இருக்கிறான். 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறான். அவனால் முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்து கொண்டு வருகிறான். 


இப்பொழுது சொல்லுங்கள்  பேருந்தின் கண்ணாடியை உடைத்தது சரியா?தவறா ? அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தில் எல்லா பேருந்துகளும் நின்று தான் செல்கின்றன. 

பேருந்து நிலையத்தின் பெயர்: மதகடி 

காவல் நிலையத்தின் பெயர்: காட்டுமன்னார் கோவில் காவல் நிலையம்

வெள்ளி, 11 ஜூலை, 2025

இந்தியாவில் அறிவுஜீவிகளின் பங்கு

 இந்தியாவில் அறிவுஜீவிகளின் பங்கு

இந்தியாவின் தேசிய நோக்கம் வறுமை, மிகப்பெரிய வேலையின்மை, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது, மக்களுக்கு சரியான சுகாதாரம் மற்றும் நல்ல கல்வி இல்லாதது போன்ற பெரிய பிரச்சினைகளை ஒழிப்பதாகும்.


இந்தியாவை பின்தங்கிய நாட்டிலிருந்து சீனா அல்லது அமெரிக்கா போன்ற நவீன தொழில்துறை பெருநகரமாக மாற்றுவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். 


இத்தகைய மாற்றத்தை, இந்தியாவை பின்தங்கியதாகவும், அரை நிலப்பிரபுத்துவமாகவும் வைத்திருக்க விரும்பும் சக்திவாய்ந்த வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு சக்திகள் உடனடியாக எதிர்க்கும். எனவே, தேசபக்தி, தன்னலமற்ற, நவீன மனப்பான்மை கொண்ட தலைவர்களால் வழிநடத்தப்படும் ஒரு வலிமையான, ஒன்றுபட்ட, நீடித்த மக்கள் போராட்டம் தேவைப்படுகிறது. இந்த மாபெரும் வரலாறு மக்கள் புரட்சியில் தொடங்கவேண்டும். இது விரைவான தொழில்மயமாக்கலையும், ஒழுக்கமான வாழ்க்கையைப் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிலையாக உயர்த்துவதை நோக்கமாக கொண்ட ஒரு அரசியல் மற்றும் சமூக ஒழுங்கை அமைக்கிறது. எனவே, நமது மிகப்பெரிய சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு புரட்சியால் மட்டுமே இது சாத்தியம். 


ஒவ்வொரு உண்மையான புரட்சிக்கும் முன்பு, நவீன சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் வழிநடத்தப்படும் ஒரு சித்தாந்தப் புரட்சி இருப்பதை வரலாற்று அனுபவம் கூறுகிறது. அவர்களின் ஆயுதங்கள் துப்பாக்கிகள் அல்லது குண்டுகள் அல்ல (உண்மையான புரட்சியில் பயன்படுத்தப்படுவது போல) ஆனால் அறிவு பூர்வமாக எடுத்து செல்லப்படும் கருத்துக்கள். 


இவ்வாறு, 17 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் உள்நாட்டுப் போர் மற்றும் புரட்சிகளுக்கு முன்னதாக Desiderius Erasmus, Francis Bacon , John Locke போன்றவர்களின் எழுத்துக்களும், ஐரோப்பாவில் Martin Luther and John Calvin போன்றவர்களின் சீர்திருத்தமும் இருந்தன, இது இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கத்தோலிக்க சித்தாந்தத்தையும் நம்பிக்கையையும் சீர்குலைத்து 'பகுத்தறிவு யுகத்தை' தொடங்கியது.


1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னதாக Voltaire, Rousseau மற்றும் பிரெஞ்சு கலைக்களஞ்சியவாதிகள் ( Denis Diderot, Baron d'Holbach , Helvetius போன்றோர்) ஆகியோரின் கோட்பாடுகள் மற்றும் எழுத்துக்கள் இருந்தன. அமெரிக்கப் புரட்சிக்கு (1775-1781) முன்னதாக Benjamin Franklin, Thomas Jefferson, and Thomas Paine மற்றும் பிறரின் எழுத்துக்கள் இருந்தன.


1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்கு முன்னதாக Alexander Herzen, Nikolai Chernyshevsky, Georgi Plekhanov, Maxim Gorky மற்றும் Lenin ஆகியோரின் எழுத்துக்கள் இருந்தன.


சித்தாந்தப் புரட்சி இல்லாமல் உண்மையான புரட்சி இருக்க முடியாது. ஒரு உண்மையான புரட்சிக்கு ஏன் முந்தைய அறிவுசார் புரட்சி தேவைப்படுகிறது?


இதற்குக் காரணம், ஒருவர் ஒரு குறிக்கோளுக்காகப் போராடுவதற்கு முன், அவர் எதற்காகப் போராடுகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் அவர் ஒரு உன்னதமான குறிக்கோளுக்காகப் போராடுகிறார் என்பதை உறுதியாக நம்ப வேண்டும். அதற்காக அவர் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கும் தேசபக்தி அறிவுஜீவிகளால் கல்வி போதிக்கப்பட வேண்டும், மேலும் அது அவர்களால் ஈர்க்கப்பட வேண்டும்.


இந்த அறிவும் உறுதியும் இல்லாமல் அவர் போராட மாட்டார்கள் அல்லது அரை மனதுடன் போராட மாட்டார்கள் .


இந்தியாவில் நாம் ஒரு சித்தாந்தப் புரட்சியின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறோம், அது நமது உண்மையான புரட்சிக்கான முன்னோடியாகும் (இது இன்னும் வெகு தொலைவில் உள்ளது). இந்தக் காலகட்டத்தில் அறிவுஜீவிகளின் பங்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அறிவுஜீவிகள் சமூகத்தின் கண்கள், அவர்கள் இல்லாமல் மக்கள் குருடர்கள்.


ஆனால் இவர்கள் உண்மையான அறிவுஜீவிகளாகவும், அடக்கமானவர்களாகவும், உண்மையைத் தேடுபவர்களாகவும், ஒரு விஞ்ஞானியைப் போலவும் இருக்க வேண்டும், இன்று காணப்படும் போலி 'புத்திஜீவிகள்' தேசத்திற்கு எது நல்லது என்பது பற்றிய மலட்டுத்தன்மையான புத்தக அறிவு, அரை வேக்காடு ஆன கருத்துக்களைக் பிடித்து கொண்டு திமிர்பிடித்து சுற்றித் திரிவதில்லை. உதாரணமாக, டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஜேஎன்யூ, டெல்லி பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல பொருளாதாரப் பேராசிரியர்கள் ஹார்வர்ட், யேல் அல்லது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் இருந்து முனைவர் பட்டங்களைப் பெற்றிப்பதாக பெருமைக் கொள்கிறார்கள், ஆனால் இந்தியாவில் வேலையின்மை பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்று யாராலும் சொல்ல முடியாது.


உண்மையான அறிவுஜீவிகளின் நோக்கம் , இந்திய மக்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கான காரணங்களையும், அதிலிருந்து வெளியேறும் வழியையும் பொறுமையாக விளக்குவதாகும். இது எளிதான காரியமாக இருக்காது, ஏனெனில் இதை எதிர்க்கும் சக்திவாய்ந்த சுயநலவாதிகள் உள்ளனர், அதே போல் மக்களிடையே பழக்கவழக்க நம்பிக்கைகளும் (சாதி, வகுப்புவாதம் மற்றும் மூடநம்பிக்கைகள்) உள்ளன, அவர்கள் பொதுவாக இயல்பிலேயே பழமைவாதிகள் மற்றும் எந்த மாற்றத்தையும் விரும்பவில்லை.


தற்போதைய நிலையை மாற்ற விரும்புபவர்கள் பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும், மேலும் இந்தியாவில் Gauri Lankesh, Narendra Dabholkar, Professor Kalburgi மற்றும் Govind Pansare ஆகியோரைப் போல உடல் ரீதியாகவும் தாக்கப்படக்கூடும்.


ஐரோப்பாவில், வால்டேர் மற்றும் ரூசோ ஆகியோர் நிலப்பிரபுக்களின் கோபத்திலிருந்து தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டியிருந்தது, அவர்களை அவர்கள் கடுமையாகத் தாக்கினர்.


இந்திய மக்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து அறிவுஜீவிகள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும், ஆனால் அவர்களின் அறிவு மேலோட்டமானது, புத்தகத்தன்மை கொண்டது, அரைகுறையானது மற்றும் செயலற்றது என்றால் அவர்களால் இதை எப்படிச் செய்ய முடியும்? அது குருடர்கள் குருடர்களை வழிநடத்துவது போல இருக்கும்.


எனவே நமது சித்தாந்தப் புரட்சியின் முதல் படி, இந்தியாவின் 'படித்த' மக்களுக்கு கல்வி கற்பிப்பதாக இருக்கும், அதைத்தான் நான் செய்ய முயன்று வருகிறேன். 'படித்த' மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே கல்வி கற்றவுடன், அவர்கள் தேசத்திற்கு வழிகாட்டும் நிலையில் இருப்பார்கள்.


- JUSTICE KATJU

இளைஞர்களின் புத்திசாலிதனம்

 இளைஞர்களின் புத்திசாலிதனம் ஒருவர் மூன்று மணி நேரம் வெகு சாதாரணமாக என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட் பற்றி துருவி துருவி விசா...